Wednesday 21 January 2015

வால்மார்ட்

வால்மார்ட்
எழுத்தாளர்: அப்பு

மெக்ஸிகோவில் இருக்கும் ஒரு பட்டாம்பூச்சி அதன் சிறகை அசைத்தால், உலகின் மற்றோரு முனையில் புயலடிக்குமா? அடிக்கும் என்னும் கேயாஸ் தியரிக்கு வாழும் உதாரணம் தான் வால்மார்ட்! அமெரிக்க அர்க்கான்ஸாஸ் மாநிலத்தின் பெண்டான்வில்லில் இருக்கும் வால்மார்ட் தலைமையகம் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் உலகின் பல முனைகளில் வாழ்பவர்களை தொட்டு செல்வதில்லை. தாக்கி செல்கிறது.

கடைகளில் விற்க வால்மார்ட் பொருட்களை வாங்கும் போது,உங்களை விட அவர்கள் பத்து பைசா கம்மியான விலைக்கு கொடுக்கிறார்கள். அதனால் இனி உங்களுக்கும் எங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று அவர்கள் முடிவு செய்தால் இலட்சம் பேருக்கு வேலை போகலாம்.மற்றோரு இடத்தில் இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கலாம். சிறுதயாரிப்பாளர்களிடம் தான் வால்மார்ட் இப்படி தன் வேலையைக் காட்டும் என்று இல்லை பன்னாட்டு நிறுவனங்கள் கூட வால்மார்ட்டிடம் வாலாட்ட முடியாது.

வால்மார்ட் உலகின் மிகவும் வெறுக்கப்படும் நிறுவனமாகவும் விரும்பப்படும் நிறுவனமாகவும் இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு சாதாரண தள்ளுபடி பலசரக்கு கடையாக ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் இப்படி விருட்சமாக வளர்ந்த வெற்றி இரகசியம் என்ன? வால்மார்ட்டின் வெற்றியின் விளைவுகள் என்ன? உலகில் வால்மார்ட் சென்ற இடமெல்லாம் வெற்றிதானா? வால்மார்ட்டின் இந்த வெற்றி நிரந்தரமானதா?

இந்தக் கேள்விகளின் விடை தேடல் தான் இந்த புத்தகம்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/walmart.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment