Wednesday 21 January 2015

கூள மாதாரி

கூள மாதாரி

பசிபிக் கடலோர நாடுகள் , தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை உருவாக்குமு் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா? ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக் கண்டம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் அடங்கும்) மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப் படும் பரிசு கிரியாமா பரிசுத்தொகை 30000 டாலர். கூள மாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய seasons of the palm 2004 ஆம் ஆண்டு இப்பரிசுப் போட்டியில் பங்கேற்றது. ஏறத்தாழ இருநூறு நாவல்களில் இருந்து ஐந்து நாவல்கள் இறுதிப் போட்க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக seasons of the palm இடம்பெற்றது. அத்தேர்வுக் குழு இந்நாவலைப்ப ற்றிக் குறிப்பிட்டிருந்து சில வாசகங்கள்: பெருமாள் முருகனின் இந்த நாவல் மிகவும் துன்பப்ப்டக் கூடிய சமூகத்தைச் சேர்ந்து குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது. தீண்டத்தகாத பிரிவனராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டுமு் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kula-mathiri.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment