Monday 5 January 2015

ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய்


எழுத்தாளர்: ஜெயமோகன் 
.ஒரு புனைவுக்கான களத்தை ஆர்வம் காரணமாக அறியவேண்டுமே ஒழிய ஆராய்ச்சி செய்யக்கூடாதென்பதே என் கொள்கை. எழுதும்போது தகவல்களைச் சொல்லும் நினைவு என்பது கற்பனையை குறுக்கும் இரும்புத்தளை. படைப்பு என்பது எனக்கு ஒரு பெரிய விழிப்புநிலை கனவுதான். கனவுபோலவே நான் அறிந்தவை என் அச்சங்கள் ஆவல்களுடன் கலந்து இன்னொன்றாக படைப்பில் இருக்கும். நானே அதை வாசித்து வியப்பேன்.
ஆகவே படைப்பில் உள்ள பிழைகள் எல்லாமே படைப்பின் பகுதி என்றே நான் எண்ணுவேன். நாகர்கோயில் மணிமேடைக்கு அருகே ஏரி உள்ளது என நான் எழுதினால் அது என்னைப் பொறுத்தவரை பிழை அல்ல. உண்மையில் ஏரி இல்லை என்பது யதார்த்தம். என் கதையில் ஏரி உள்ளது என்பது புனைவுயதார்த்தம். ஏன் அந்தப் பிழை அங்கே நிகழ்ந்தது என்றுதான் வாசகன் யோசிப்பான். என் கனவுக்குள் அறிவார்ந்த முறையில் நுழைய அவனுக்கு அது நல்ல வழி.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/umai-chennai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment