Saturday 31 January 2015

மானசரோவர்

மானசரோவர்

திரையுலகை மையமாக வைத்து எத்தனையோ நாவல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றுவரை தமிழில் எழுதப்பட்ட மகத்தான கலைப்படைப்புகளாகத் திகழ்பவை அசோகமித்திரனின் கரைந்த நிழல்களும் மானசரோவரும்தான். சினிமா என்னும் வண்ணக்கனவின் பின்புலத்தில் கவிந்திருக்கும் ஆழமான இருளுக்குள் ஒரு மெழுகுவர்த்தி துணைகூட இல்லாமல் பயணம் மேற்கொள்கிறார் அசோகமித்திரன். அரிதாரம் அவருக்கு ஒரு பொருட்டில்லை. அந்தராத்மாக்களை அடையாளம் காண்பதே அவரது நோக்கம். சினிமா உலகில் புழங்கும் இரு நண்பர்களைக் குறித்த இந்நாவலுக்கு சினிமா பின்னணியேகூட ஒர் அரிதாரம் என்று தோன்றக்கூடும். சினிமாவானால் என்ன, வேறெந்தத் துறையானால் என்ன? உலகம் உயிர்த்திருக்கக் காரணமாக இருப்பது மனித மனமும் அன்பும் நம்பிக்கையும் நம்பிக்கைத் துரோகங்களும், தீராத விசித்திரச் சுபாவங்களும்தானே.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/manasarovar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment