Saturday, 29 November 2014

லா.ச.ராமாமிருதம் கதைகள்( மூன்றாம் தொகுதி)

 தமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள் , காட்டாற்றைப்போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெதுவாக ததும்பும் வரிகள் ...லா.ச.ராமாமிருதத்தை புரிந்து கொள்வது எளிதல்ல . சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும்.இவர் கதைகளில் ஊடாடுவது பக்தி, கடவுள் பக்தி, குடும்ப அமைப்பின்மேல் பக்தி,பக்தியின் மேல் பக்தி,தமிழ்க் கொச்சையில் விளையாடும் அழகின் மேல் பக்தி ,துக்கத்தின்மேல்,கோபத்தின்மேல்,ஏழைமேல், சங்கேதங்களின் மேல்... ராமாமிருதத்தைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப் பேச லாயக்கில்லை.

                                       இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/laa-sa-ramamirutham-kadhaigal-part-3.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பிரமிள்

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலிமையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மெளனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.


இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/pramil.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சிறுவர் நூல்கள்

சிறுவர் நூல்கள்
இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/siruvar-noolgal-books.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதிர்மறையான சூழலில் ஒரு கலைஞனின் கலைத் தேடலைச் சிலிர்ப்பூட்டும் விதம் சொல்லும் 'லங்கா தகனம்' என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரிவானது. இலக்கியத்தை அழகனுபவமாகவும் ஆன்மீக அனுபவமாகவும் கருதும் வாசகர்களுக்கான ஆக்கங்கள் இவை.

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/jeyamohan-kurunavalgal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/nakulan-hernthedutha-kavithaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அக்னி

சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.

சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.

நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எந்த ஒரு மரணமும் இதுவரை நிகழ்ந்ததில்லை. முற்றிலுமாக எரித்தபின்பும் சாம்பலை மிச்சம் வைக்கிறது அக்னி. வாழ்க்கை தீர்ந்துபோனால் மரணம் என்பது உண்மையெனில், இந்தப் பத்திரிகையாளருக்கு மட்டும் எப்படி இறந்தபிறகு தொடங்குகிறது வாழ்க்கை?

மென்மையான உரையாடல்கள். அழுத்தமான கதை. இ.பாவின் அரசியல் தொடாத மிகச் சில நாவல்களுள் ஒன்று இது.

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/agni.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பன்னாட்டு பல்சுவை கதைகள்

வாண்டு மாமாவின் பன்னாட்டு பல்சுவை கதைகள்

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pannatu-palsuvai-kathaigal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Thursday, 27 November 2014

ஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி

“இருளடைந்த மாகாணம் என்றழைக்கப்படக்கூடிய பாக்கியம் பெற்ற நமது சென்னையில், ஸ்ரீ ஜி. சுப்ரமணிய ஐயரும் அவரைப் பின்பற்றியொழுகும் சிலரும் தவிர, மற்ற பெரும் பெயர்களெல்லாரும் தாங்கள் பழைய சாதியைச் சார்ந்த பரம சாதுக்கள் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் தூங்குகின்றார்கள்” என்று பாரதி குறிப்பிடும் ஜி. சுப்ரமணிய ஐயர், அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். ‘தி இந்து’ ஆங்கில இதழின் தொடக்கத்துக்குக் காரணமான அவர், தமிழ் மட்டும் அறிந்தவர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியவர். ‘தேசியத்தின் திரிசூலம்’ என்று அழைக்கப்பட்ட பாரதி வ.உ.சி.- சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பெரும் மதிப்பைப் பெற்றவர். ஊக்கம் தரும் அவரது வாழ்க்கையைக் குறித்துப் பேசும் இந்நூலை பெ.சு. மணி எழுதியிருக்கிறார்.

மதவேற்றுமைக்கு எதிரானவர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1855 ஜனவரி 19-ல் பிறந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். திருவையாற்றில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், 1874-ல் சென்னையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது முடும்பை வீரராகவாச்சாரியாரின் அறிமுகம் கிடைத்தது. சுப்பிரமணிய ஐயரின் அரசியல் வாழ்வுக்கு வீரராகவாச்சாரியாரின் நட்பு பெருமளவில் உதவியது. பின்னாளில் தலைமை ஆசிரியராக உயர்ந்த அவர், திருவல்லிக்கேணியில் தொடங்கிய பள்ளியில் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு பயிற்றுவித்தார். ஜாதி, மத வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் சீர்திருத்தக் கொள்கையுடன் இயங்கிய அவர், ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகளின் இந்து மத வெறுப்பையும் சாடியவர்.

சென்னையில் 1850-களில் தொடங்கப்பட்ட இலக்கியச் சங்கங்கள், அரசியல் சமூகப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை வளர்த்தெடுத்தன. இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகளை அனுப்பிவந்த ‘டிரிப்ளிகேன் லிடரரி சொசைட்டி’யில் சுப்பிரமணிய ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரது அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளுக்கு இந்தச் சங்கம் அடித்தளம் இட்டது. 1878-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்படுவதை ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. அப்போது பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. முத்துசாமி ஐயரின் நியமனத்துக்கு எதிராக எழுந்த பிரச்சினையிலும் இது எதிரொலித்தது. இந்த விவகாரம் தமிழர்களிடையே பிளவு ஏற்படுத்தியது சுப்பிரமணிய ஐயருக்கு வருத்தம் அளித்தது.

இந்தக் காலகட்டத்தில், ஆங்கிலம் கற்றவர்களிடம் அரசியல் விவாதங்களைப் பரப்பும் நோக்கில் ‘தி இந்து’ ஆங்கில இதழைத் தொடங்கினார். ‘டிரிப்ளிகேன் லிடரரி சொசைட்டி’யைச் சேர்ந்த முடும்பை வீரராகவாச்சாரியார், டி.டி. ரங்காச்சாரியார், பி.வி. ரங்காச்சாரியார், டி. கேசவராவ், என். சுப்பாராவ் பந்துலு ஆகியோரும் ‘தி இந்து’ இதழ் உருவாக்கத்தில் பங்குபெற்றனர். 1882-ல் ‘சுதேசமித்திர’னைத் தொடங்கினார். இதில் துணை ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்களில் குருமலை சுந்தரம் பிள்ளை, பாரதியார் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘விகடதூதன்’, ‘வெற்றிக்கொடியோன்’ போன்ற இதழ்கள் சுதேசமித்திரனைப் பின்பற்றி அரசியல் விமர்சனம் செய்தன என்று ஆங்கிலேய அரசின் அறிக்கையிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தமிழுக்கு அவர் அளித்த வார்த்தைகள், பிற இதழ்களால் பின்பற்றப்பட்டன.

சீர்திருத்தக் கொள்கையில் உறுதி

சமூக சீர்திருத்தக் கொள்கையில் தீவிரமாக இயங்கிய சுப்பிரமணிய அய்யர், சொந்த வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார். 10 வயதிலேயே கணவனை இழந்த தனது மகளுக்கு, மறுமணம் நடத்த முடிவுசெய்தபோது பலத்த எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அவரது மகளின் மறுமண வாழ்க்கை கசப்பானதாக இருந்ததும், இளம் வயதிலேயே அந்தப் பெண் மரணமடைந்ததும் அவரை வருத்தமுறச் செய்தது. தீண்டாமைக்கு எதிராகவும் அவர் பல கட்டுரைகள் எழுதினார். ‘எத்தனை கொடூரக் குற்றம் செய்தாலும் பிராமணர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாது’ என்று திருவிதாங்கூர் தலைமைச் செயலாளர் சட்டம் கொண்டுவந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். ‘கொடூர மூடபக்தி’ என்று அதை விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற 72 அறிஞர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்தாலும், அவரது சீர்திருத்தக் கொள்கைகளை விரும்பாத சென்னை பிரமுகர்கள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் பெ.சு. மணி.

காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இருபிரிவுகளாகப் பிரிந்தபோது தொடக்கத்தில் மிதவாதிகளின் ஆதரவாளராகவே இருந்திருக்கிறார் சுப்பிரமணிய ஐயர். கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதிகள் பக்கம் அவர் சாயத் தொடங்கியதும் அதை மகிழ்வுடன் வரவேற்றவர் பாரதியார். ஜனவரி 10, 1907-ல் ‘இந்தியா’ இதழில் பாரதி இதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். விபின் சந்திரபாலர், கோபால கிருஷ்ண கோகலே, ஏ.ஓ. ஹியூம் போன்ற தலைவர்களின் அபிமானத்தைப் பெற்றவர் சுப்பிரமணிய ஐயர். அரசியல் கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முதல் தலைவரும் அவர்தான் என்று பெ.சு. மணி குறிப்பிடுகிறார். இதுபோன்ற அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் இது.

திலகர், வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்கள் குறித்த ஆய்வுகள், தமிழறிஞர்கள், பதிப்பாளர்கள், பக்தி இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் என்று முக்கிய நூல்களை எழுதிய பெ.சு. மணி இந்த நூலை எழுதியிருக்கிறார்.

ஜி. சுப்பிரமணிய அய்யரின் மகன் வயிற்றுப் பேரனான வி. சுப்பிரமணிய அய்யர் கூறிய பிரத்யேகத் தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஜி. சுப்பிரமணிய ஐயர் எழுதிய தமிழ்க் கட்டுரைகளைச் சேகhttp://www.udumalai.com/thamilaga-munnodi-g-subramaniya-iyyar.htmரித்து ‘குமரி மலர்’ மாத இதழில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டதையும் இந்நூலில் பெ.சு. மணி பதிவுசெய்திருக்கிறார். இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்கை அறிய விரும்புபவர்களுக்கு முக்கியமான வழிகாட்டி இந்த நூல்.

- வெ. சந்திரமோகன்,

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thamilaga-munnodi-g-subramaniya-iyyar.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கொழும்பு முதல் அல்மோரா வரை

கொழும்பு முதல் அல்மோரா வரை
சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள்

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/columbo-muthal-almoro-varai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் (பாகம் 5)

சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் (பாகம் 5)
இணையத்தில் வாங்க 

http://www.udumalai.com/alla-alla-panam-part-5.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆளண்டாப் பட்சி

பெருமாள் முருகனின் ஆறாவது நாவல் இது.

மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாக கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/alanda-patchi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சயனம்

சயனம்

வா.மு.கோமு

பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு.கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/sayanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வண்ணக்கடல் - வெண்முரசு -3

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமை-களையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது- போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.

இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத திசையை சித்தரிக்கிறது.

இன்னொரு சரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப் பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடைகிறான்.

வாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்துச் செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது.

ஜெயமோகன்

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/vannakadal-venmurasu-1.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வைரமுத்துவின் வானம் தொட்டு விடும் தூரம்தான்

காதல் மட்டுமல்ல: காதலுக்கான எதிர்ப்பும் கூட ஒர் அனிச்சைச் செயல்தான் நெருப்பா? அனைத்து விடு ! காதலா? அழித்து விடு! இப்படிதான் சமூகம் வளர்ந்திருக்கிறது இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

இதில் வியப்பதற்கு எதுவுமில்லை ஓசோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்க செய்வது காதல்

காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை காதலால் வாழும் ஒரு ஜோடி காதலை வாழ வைக்க இந்தத் சமூகத்தையே எதிர்த்து போராடும் கதை இது கவிப்பேரரசரின் முதல் நாவல் இதுவே "நட்பு" என்னும் திரைப்படமும் இதே படைப்புதான்..

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/vanam-thottu-vidum-thooramthan.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உணவு யுத்தம்

எஸ்.ராமகிருஷ்ணனின் உணவு யுத்தம்  ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று இப்போது நூல் வடிவில்.

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/unavu-yuthamu.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Wednesday, 26 November 2014

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.

தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, தமிழின் மிக முக்கியமான படைப்பு ஆளுமை.சிறு கதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனப் பல துறைகளில் குரிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தவர் என்றாலும், மிக அதிகம் நினைக்கப்படுவது அவரது புகழ் பெற்ற நாடகங்களுக்காக. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிலகாலம் நாடகத்துறை பேராசிறரியராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, பாரதிய பாஷா பரிஷத் உள்பட பல விருதுகள் பெற்றவர்.

கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவரான இ.பா., பலகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். தற்சமயம் வசிப்பது சென்னையில். வயது 77

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/indira-paartha-sarathi-naadagangal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வெள்ளை யானை


உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும்.இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

- ஜெயமோகன்

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/vellai-yanai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

தொகுப்பு : ஞானக்கூத்தன்

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/na-pichamoorthiyin-therthedutha-kavithakal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது)

சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற கன்னட நாவல்

எழுதியவர் கே.பி.பூரணச்சந்திர தேஜஸ்வி தமிழில் ப.கிருஷ்ணசாமி

கர்நாடகத்தின் மலைநாட்டு பகுதியிலுள்ள கெசரூர் அழகான ஒரு சிறிய நகரம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் அதை சுற்றியே அமைகின்றன.பிரச்சினைகளும் அதன் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சினைகள் பற்றி துப்பு துலக்கஒரு புலனாய்வு அதிகரி வருகிறார். ஊரின் ஒவடவொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப் பாம்பு, மன சாட்சியுள்ள ஆனால் தெளிவில்லாத ஜீவிகள், சுயநலம் கொண்ட அதிகார வர்க்கம் என அவரது அனுபவக்களம் விரிகிறது

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/chidhambara-ragasiyam.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வைரமுத்து: ஆயிரம் பாடல்கள்

 எந்திரன் வரை வைரமுத்து எழுதிய 7000 பாடல்களில் இருந்து தொகுத்த 1000 பாடல்களில் தொகுப்பு

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vairamuthu-aayiram-padakal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஹிட்லர் (ஆதி முதல் அந்தம்வரை சொல்லப்படாத சரித்திரம்)

ஹிட்லர் (ஆதி முதல் அந்தம்வரை சொல்லப்படாத சரித்திரம்)
இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/aathimuthal-andham-varai-hitler-spllapadatha-sarithiram.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கம்பராமாயணம் ( 7 -தொகுதிகள் )

கம்பராமாயணம் ( 7 -தொகுதிகள் )

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kambaramayanam-7-parts.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

குழந்தைப் போராளி

ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே காலனிய எதிர்ப்பு இலக்கியம்தான் என்ற பார்வை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காலனியாட்சியின் போது ஆப்பிரிக்க மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், குறிப்பாக அவர்களது பண்பாட்டு அடையாளங்களும், வரலாறும் சந்தித்த சவால்கள், இவற்றை அம்மக்கள் எதிர் கொண்ட விதம், வெள்ளை இன ஆதிக்கத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு புரட்சிகள் - இவையே 1960கள் முதல் 1990கள் வரை ஆப்பிரிக்க முன்னணி எழுத்தாளர்களின் கற்பனையையும் கவனத்தையும் ஆட்கொண்டிருந்தன.

என்றாலும், ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தனர். கென்யாவைச் சேர்ந்த கூகிவா தியாங்கோ உள்ளூர் முதலாளிகளையும் அவர்களது வெளியூர் கூட்டாளிகளையும் இணைக்கும் உறவுகள் குறித்து தனது நாவல்களில் எழுத வந்தார்.காலனியாட்சியின் கொடூரங்களை அறிவிக்கும் எழுத்து மட்டும் ஆப்பிரிக்க எழுத்தாகாது, மாறாக, காலனியாட்சிக்குப் பின் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டிலும் வேரூன்றிய ஆட்சியையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பதிவு செய்வது அவசியம் என்ற கருத்தை நைஜீரியா நாட்டு எழுத்தாளர் வோலெ சோயின்கா வலிறுத்தினார். 1984இல் அவர் ஆப்பிரிக்காவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த நால்வரை மையமாக வைத்து ஒரு நாடகம் எழுதினார் (A Play of Giants). காலனியாட்சியை காரணம் காட்டி, தாம் செய்யும் வரையற்ற கொடுமைகளை ஆப்பிரிக்க தேசிய தலைவர்கள் நியாயப்படுத்தி வந்ததை இந்நாடகம் தயவுதாட்சண்ய மின்றி பகடி செய்தது. அந்நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் சின்ன வயசிலேயே அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் குழந்தைகளை கொன்றுவிட வேண்டியதன் தேவையை சுட்டிக் காட்டி விளக்கமும் அளிப்பான். சில குழந்தைகளை இன்றே கொல்வது மேலாகும். இதைச் செய்யாவிடில், எதிர்ப்பு என்ற நஞ்சு அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் என்பான். இதற்கு மற்றொருவன் ஆதரவு தெரிவித்து, மேலும் கூறுவான் - எல்லா பெரிய மனிதர்களுக்கும் குழந்தைகள் என்றால் ஆசைதான். இட்லரை எடுத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளிடம் எவ்வளவு பிரியமாக இருந்தான்.

இந்த பகடியும் தர்க்கமும்தான் ‘குழந்தைப் போராளி’ நூலைப் படிக்கையில் நினைவுக்கு வருகின்றன. அதாவது, ஆப்பிரிக்க காலனிய எதிர்ப்பு நாவல்கள் சொல்லும் கோபாவேசமான நியாயங்களை ஊடறுத்து, சுயாட்சியில் அக்கண்டம் கண்டுள்ள அவலங்களை முன்நிறுத்திய சோயின்காவின் எழுத்துதான், இந்தப் புத்தகம் காட்டும் உலகை புரிந்து கொள்ள உதவுக்கூடியதாக உள்ளது.அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கோரும் நரபலிகளில் குழந்தைகளின் உயிர்களை அது காவு வாங்கும் பயங்கரத்தை ‘குழந்தைப் போராளி’ சுட்டிக்காட்டுகிறது. குழந்தையாக இருக்கும்போதே போராளிக்குழு ஒன்றில் இணைந்து தன்நாட்டு அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற சிறுமியின் தன்வரலாறாக இது விரிகிறது.

குழந்தைப் போராளியின் ஆசிரியர் விவரிக்கும் உலகமானது குழந்தைப் பருவம் என்பதை தொலைத்த ஒன்று. ஆப்பிரிக்காவில் இரண்டு மூன்று வயது நிரம்பிய குழந்தைகள்கூடப் பலமான உடலமைப்பைக் கொண்டதால், அவர்கள் வேலை செய்ய தகுதியானவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள் (ப.18) என்று நூலாசிரியர் சைனா கெய்ரற்சி குறிப்பிடுகிறார். இத்தகைய உலகங்கள் இருப்பதை நாமும் அறிவோம்.வயதையும் பருவத்தையும் பொருட்படுத்தாத அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் பழகிப்போன நமது சாதி சமுதாயத்தில் குழந்தைகள் உரிமை என்பது அனுதினமும் மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. (கூள மாதாரி நாவலில் பெருமாள் முருகன் இத்தகைய உரிமை-மறுப்பின் நுணுக்கங்களை யதார்த்தமாகவும் அவலச்சுவையுடனும் சித்தரித்துள்ளார்).

இலங்கையில் நடந்துவரும் போரில் குழந்தைகள் போராளிகளாக இணைக்கப்பட்டு, தம்மை விட உயரமான துப்பாக்கிகளை சுமந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதையும்- அனுப்பப்படுவதையும் - நாம் அறிவோம். என்றாலுமே, இந்தப் புத்தகம் சொல்லும் செய்திகள் நம்மை திடுக்கிடச் செய்கின்றன. வன்மமும், குரூரமும் வாழ்வாகிவிட்ட ஒரு சூழலை மிக இயல்பானதாக அறியும் குழந்தைகளை இங்கு நாம் காண்கிறோம். என்னையும் இராணுவத்தில் சேர்த்துக்கொள் என்று அப்பாவித்தனமாகவும் ஆசையாகவும் குழந்தைகள் சற்றே பெரிய குழந்தையான சைனா கெய்ரற்சியிடம் முறையிடும் காட்சியை எவ்வாறு புரிந்து கொள்வது?

கையில் துப்பாக்கி இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம், யாரையும் அடி பணிய வைக்கலாம் என்பதை குழந்தைகள் மிகச் சீக்கிரம் கற்றுக்கொள்வதையும் இங்கு காண்கிறோம்.பருவம், பாலினம் என்று இல்லாமல் சகலரையும் பயன்படுத்திக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொள்ளும் குழந்தைகளை இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகம் செய்கிறது.

இவ்வளவுக்கும் நூலாசிரியரின் நடையில் பரபரப்பு இல்லை, பதட்டம் இல்லை, கழிவிரக்கம் இல்லை. தான் சொல்வதைக் கேட்டு பிறர் மனம் வருந்த வேண்டும், சோகமடைய வேண்டும் என்ற ரீதியில் எழுதாமல், இதுதான் உண்மை, இதை தவிர வேறு உண்மைகள் எனக்கு தெரியாது என்றுதான் அவர் எழுதியுள்ளார். அதாவது, தான் வாழ நேர்ந்த சூழலை அசாதாரணமானதாக அவர் உணர்வதில்லை. நூலைப் படிப்பவர்களுக்குதான் அந்த உணர்வு ஏற்படுகிறதே அன்றி அவரது எழுத்தில் அந்த உணர்வு இல்லை. ஒருவர், மோசமான, ஒடுக்குமுறையான சூழலை அவ்வாறானதாக அறிய அரசியல் பார்வையோ அறவுணர்வோ முக்கியமானதாக உள்ளது. அல்லது, அத்தகைய சூழல் தற்காலிகமானது, அதை சகித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் காலம் மாறும், புரட்சி ஏற்படும் என்ற உணர்வு ஒடுக்குமுறையை இனங்காண, பொறுத்துக்கொள்ள உதவும்.

ஆனால் சைனா வாழும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தற்கால உகாண்டாவில், உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அப்படிப்பட்ட பார்வையோ புரிதலோ சாத்தியமில்லை என்பதை அறிய முடிகிறது.இத்தகைய போர் தொடர்ந்து நடைபெறுவதற்கான நியாயங்கள் ஒரு புறமிருந்தாலும், குழந்தைகளை வைத்துக் கொண்டு போரை தொடர்ந்து நடத்தும் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளில் அரசியல் புரிதலை காட்டிலும் அதிகார வெறியும் மெத்தனமுமே வெளிப்படுகின்றன. இக்குழுத் தலைவர்களின் போர் வெறியைத் தணிப்பதற்கு மட்டுமல்லாமல், இவர்களுக்கு பணிவிடை செய்ய, உணவு எடுத்து வர, இவர்களது பாலியல் தேவைகளை நிறைவேற்ற குழந்தைகள் தேவைப்படுகின்றனர்.

குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களது குடும்பங்களின் வறுமை, உகாண்டாவின் பல்வேறு இனக்குழுவினரிடையே ஏற்படும் சண்டைகளில் குடும்பத்தினர் இறந்து போதல், அல்லது மானபங்கம் செய்யப்படுதல், சைனாவின் குடும்பத்தில் உள்ளது போல, குடும்பச் சூழலில் குழந்தைகளை தாக்கும் வரம்பற்ற வன்முறை முதலியன அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. இவ்வாறு ஓடிப்போகும் குழந்தைகளுக்கு, ஓடிப்போக நினைக்கும் குழந்தைகளுக்கு போராளிக்குழுக்கள் சரணாலயங்கள் போல் ஆகிவிடுகின்றன.

போராளிகள் எழுப்பும் வீராவேசமான கோஷங்கள் குழந்தைகளை ஈர்த்தாலும், அவர்களுக்குப் புகட்டப்படும் அரசியல் அறிவை காட்டிலும் அவர்களது வாழ்வனுபவங்களே அவர்களது தேர்வுகளையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன.பிறந்தது முதலே தாயை அறியாத துயரம், தந்தையின் புறக்கணிப்பு, சிறுவயதிலிருந்தே அவர் அவளை ஏசியது, அடித்தது, தூக்கிப் போட்டு உதைத்தது, போதுமான அளவுக்கு உணவு கொடுக்காமல் சித்தரவதை செய்தது, அவள் மீது பாசம் காட்ட விழையாத பாட்டியிடம் அவளை விட்டது ஆகிய காரணங்கள் சைனாவை வீட்டை விட்டு விரட்டுகின்றன.

அவளுடைய அப்பாவுக்கு பிற மனைவிகளால் பிறந்த குழந்தைகள் சைனாவின்மீது பாசம் காட்டவே செய்கின்றனர். குறிப்பாக வயதில் மூத்த சகோதரிகள் அவளைப் பரிவுடனே அணுகுகின்றனர். ஆனால், அவர்களது வாழ் நிலைமைகள் சீராக இல்லாத சூழ்நிலையில் அவர்களால் சைனாவுக்கு, ஏன் தங்களுக்கென்றும் கூட எதையும் செய்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. தனது தாயை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் சைனா அங்குமிங்கும் அலைகிறாள், தாயை கண்டுபிடிக்கவும் செய்கிறாள், ஆனால் அவளை வாட்டும் பயம், விரட்டும் இனந்தெரியாத ஏக்கம் தாயை விட்டும் நீங்கச் செய்கிறது. இந்தச் சூழலில்தான் அவள் உகாண்டா அரசை எதிர்த்து போராடும் போராளிக் குழுவில் சேர்கிறாள்.

7 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும் போர்முனையில் சண்டையிடவும், முன்னேறித்தாக்கவும், பதுங்கி இருக்கவும் கற்றுக் கொள்கிறாள். போராளிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அவளுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் காவலாளியாக வேலை கிடைக்கிறது (அவளுக்கு அச்சமயம் 13, 14 வயது கூட இருந்திருக்காது). மீண்டும் தாயை தேடிச் சென்று அவருக்காக நிலம் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறாள். தனக்கும் அவருக்குமாக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறாள், வேலை போகிறது, வேறொரு வேலையில் சேர்கிறாள். அவள் வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் பாலியல் தொல்லைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிறாள். என்றாலும் அவள் போராளிக்குழுவில் இருந்தவள் என்பதால் அவளது சூரத்தனங்களைப் பற்றி வதந்திகளும் கட்டுகதைகளும் வலம் வருகின்றன. அவளை கண்டு பிறர் அச்சமடைய அவை காரணமாகின்றன.

இந்த அச்சத்தைப் பயன்படுத்தி, மது அருந்தும் சாலைகளில், கடை தெருவில் அவளுக்கு வேண்டியவற்றை அவளால் பெற்றுக் கொள்ள முடிகிறது. முடிவாக,போராளி ஒருவருக்கு எதிராக ஆட்சியாளர்கள் வழக்குத் தொடுக்க, சைனாவும் சந்தேகத்துக்கு ஆளாகிறாள். அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவள் உகாண்டாவை விட்டு நீங்கி அமெரிக்கா செல்ல முயற்சிக்கிறாள்.

இதற்கிடையில் அவள் காதலுற்று, கருவுற்று ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். குழந்தையை அவளது சகோதரியிடம் விட்டு விடுகிறாள்.அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வியில் முடிய, தென் ஆப்பிரிக்காவில்தான் சைனாவால் தஞ்சங் கொள்ள முடிகிறது. அங்குமே, உகாண்டா அரசின் உளவாளிகள் அவளைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து மீண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான அகதிகள் ஆணையத்திடம் போய்ச் சேர்கிறாள். மிக மோசமான உளவியல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவளைத் தேற்றவும் குணப்படுத்தவும் அந்நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அவளது கதையை சொல்லச் சொல்லி அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்கிறது. மனச்சுமைகளை அவள் இறக்கி வைத்தாலாவது அவள் குணமடைவாள் என்ற இதைச் செய்கிறது.

இவ்வாறு உருவானதுதான் ‘குழந்தைப் போராளி’. குழந்தைப் போராளி சொல்லும் வாழ்க்கைக் கதையில் வீர தீரச் செயல்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதிலும், வாய்ப் பேச்சு அரசியல் வீரத்துக்கும் கருத்தியல் முழக்கங்களுக்கும் இதில் இடமில்லை. இதற்கு இரண்டு காரணங்களைச் சுட்டலாம். முதல் காரணம் - குழந்தையாகப் போரிடும்போது போரிற்கான அரசியல் பின்னணியும் கருத்தியல் நியாயமும் முக்கியமானதாக இருப்பதில்லை. சைனாவைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே சொன்னதுபோல், தனது தந்தையிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே போராளிக்குழுவில் - அதுவும் எதேச்சையாக - சேர்கிறாள். போராளி என்ற அடையாளத்தை கவசம் போல் அணிகிறாள். என்றாவது ஒருநாள் தந்தைக்கு புத்தி புகட்ட, அவர்மீது பழி தீர்க்க தனது போராளி அனுபவங்களும் அடையாளமும் உதவும் என்று நினைக்கிறாள்.உகாண்டா அரசை எதிர்க்கும் போராளிக் குழுவின் இலட்சியங்களைப் பற்றி அவளுக்கு மேலதிகமான அக்கறை இல்லை. அதிகாரத்தை கைப்பற்றப் போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவளையும் அவளைப் போன்ற சிறுமிகளையும் போர் புரிய வைக்கிறது.

இங்கு வேறொரு முக்கியமான விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். குழந்தையாக இருந்து பெரியவர்களின் உலகைப் பார்க்கையில் குழந்தையின் கண்களுக்கு எட்டுபவைதான் அதற்கு காட்சிகளாகின்றன. ஏனையவை காட்சிவெளிக்கு அப்பாற்பட்டவையாகவே எஞ்சிவிடுகின்றன. வயதுக்கு மீறிய விஷயங்களை அனுபவிக்க நேரிட்டாலும், குழந்தையாகவே அவ்வனுபவங்களை சைனாவும் பிறரும் உள்வாங்கிக் கொள்கின்றனர். சைனா எதிர் கொள்ளும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அவளுக்கு அருவருப்பை ஊட்டுகின்றன, அவளை திகிலடையச் செய்கின்றன. ஆனால் பெரியவர்களால் பந்தாடப்படும் வாழ்க்கையில் தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்கு இது நடப்பது இயல்பே என்றுதான் அவள் நினைக்கிறாள். தன்னை மீறி நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவும், எதிர்கொள்ளவும் முடியாத, இயலாத சூழ்நிலையில் ஒரு குழந்தை என்ன செய்யுமோ அதைத்தான் அவளும் செய்கிறாள் - தூங்கும்போது படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள்.குழந்தைகளுக்கு பிடிபடாத அரசியல் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அந்த அரசியலின் நுணுக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இரண்டாவது காரணம் - குழந்தைப் போராளி என்பவள் பெரியவர்களின் அரசியல் ஆசைளை நிறைவேற்றும், அவற்றுக்காக காவு கொடுக்கப்படும் உடலாக மட்டுமே பாவிக்கப்படுகிறாள். பலிஆடுகளாக வலம்வரும் போராளிகளுக்குத் தெரிந்த அரசியல் ஒன்றே ஒன்றுதான் - அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும். சைனாவும் அவளைப் போன்ற குழந்தைகளும் அதிகாரம் என்பதற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாய் உள்ளனர். அவர்களுக்கிடையே தோழமையும் பாசமும் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நபர்களாய் இருப்பவர்கள், அவர்களை அதட்டி, மிரட்டி அடிபணியவைத்து, போராளிகளாக்கும் அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் வாக்கும் செயலுமே அவர்களை வழிநடத்துவதால், அவ்வதிகாரிகளை மீறிய அல்லது அவர்களுடைய ஆளுமைகளுக்கு உட்படாத எதுவும் குழந்தைகளுக்கு முக்கியமானதாக படுவதில்லை.

மேலும் குழந்தைகளுக்கும் அவர்களது உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் அதிபதிகளாக உள்ள அதிகாரிகளுக் கும் ஒருவித நெருக்கமும் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தை களின் விசுவாசம் அதிகாரிகளை இறுமாப்படையச் செய்கின்றன. அதிகாரிகளின் கவனிப்பு குழந்தைகளுக்கு தேவையானதாக இருக்கிறது.சைனாவை நாளும் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கி, அவளைத் திணறடிக்கும் கசிலிங்கி என்னும் அதிகாரியுடனான அவளது உறவு இத்தகையதுதான்.

கசிலிங்கி அவளை தனது காவலாளியாக தேர்ந்தெடுக்கிறான். தனது இச்சைகளுக்கு அவள் இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவள், தனது நிலை மையை இவ்வாறு விளக்குகிறாள். “அவரது கொடுமையான பக்கங்களை நினைத்துப் பார்ப்பதற்குகூட நான் அஞ்சினேன். எனது முகத்திலிருந்தே எனது உள்ளத்திலிருப்பவற்றை அவரால் வாசித்துவிட முடியும்”. (ப. 178) அவனுடைய அதிகாரத்துக்கும் வெறிக்கும் கட்டுப்பட்டவளாய் வாழ அவள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் அவனை வெறுக்கிறாள். ஆனால், அவனை போராளிகளின் அரசு சந்தேகத்தின் பெயரில் சிறைபடுத்திய போது அவனுக்காக அவள் வருந்துகிறாள் - “என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட கசிலிங்கி எனக்கு எதையுமே கொடுத்ததில்லை. ஆனாலும்கூட அவரது நிலைமையைக் கண்டதும் எனது கண்கள் கலங்கின” (ப. 209).

இவ்வாறு தன்னை துன்புறுத்துவோருடன் குழந்தைகள் கொண்டிருக்கும் நெருக்கமானது ஒருபுறம், அவர்களுடைய தன்னிலையை உறுதி செய்கிறது. மறுபுறமோ, அவர்களை நிலைகுலையச் செய்கிறது. இறுதியில் சைனா போன்றோருக்கு சுய-வெறுப்பு மட்டுமே எஞ்சுகிறது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது, அவளுக்கு அருவருப்பு ஏற்படுகிறது. தன்னிலிருந்து தான் அந்நியப் பட்டிருப்பதை அவள் உணர்கிறாள்.

அதிகாரத்தையும் வன்மத்தையும் கடந்த வாழ்க்கையை பற்றி குழந்தைகளால் யோசிக்க முடியாததையும் பார்க்கிறோம். சைனாவுக்கு இரு நல்ல நண்பர்கள் வாய்க்கின்றனர். ஒருவன், அவள் தந்தையை பழிதீர்க்க நினைப்பது தவறு என்கிறான், இவ்வாறு செய்தால் அவளும் அவளுடைய தந்தையை போன்று குரூரமானவள் என்பது உறுதியாகி விடும், தான் அப்படியில்லை என்று சைனா நினைப்பாளாகில், பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். ஆனால் இதுபோன்றோருடன் சைனாவால் தொடர்ந்து நட்பைப் பாராட்ட முடியாமல் போய்விடுகிறது.

அவளது காதலன் டிராகோவைப் பற்றி பரிவுடன் எழுதுகிறாள், ஆனால் அவனுக்காக அவள் விசேஷமாக எதையும் செய்வதில்லை. காதல் நோய்வாய்ப்பட்டு கிடப்பதுமில்லை. போர்ச் சூழலில் வடிவமைக்கப்பட்ட அவளது ஆளுமை, அமைதியான, அன்பை மையமாகக் கொண்ட வாழ்க்கையை பற்றிய சிந்தனையை மறுக்கிறது. போர்க்கால அனுபவங்களிலிருந்து மீண்டு சாதாரண, அன்றாட வாழ்க்கைக்கு பழக்கப்படுவது என்பது அனைத்து போராளிகளுக்கும் உள்ள பிரச்சனைதான். ஆனால் போரைத்தவிர வேறு எந்த மெய்மையையும் முக்கியமானதாக அறியாத குழந்தைகளுக்கு அது பெரும் பிரச்சனையாக இருப்பதை இலங்கையில் முன்னாள் குழந்தைப் போராளிகளுடன் பணி புரிந்துள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர். இவை எல்லாவற்றையும் மீறி போராளிகள் குழந்தைகளாக இருப்பதையும் நாம் அறிகிறோம்.

சைனா அணிந்து கொள்ளும் சீருடைகள் அவளைவிட பெரியவர்களுக்கானது. அவளை விடவும் பெரிய துப்பாக்கிகளை அவள் சுமக்கிறாள். அவளும் அவளுடைய கூட்டாளிகளும் கதை பேசுகின்றனர், விளையாடுகின்றனர். பாட்டி வீட்டில் இருக்கும் போது பாட்டிக்குத் தெரியாமல் அவள் வாழைப்பழம் தின்னும் காட்சியில் பசியால் பரிதவிக்கும் சராசரி குழந்தையையே காண்கிறோம். எல்லா குழந்தைகளையும் போல அன்புக்காக அவள் ஏங்குகிறாள். தன்னிடம் யாராவது பரிவோடு நடந்து கொள்ள மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடனேயே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எஞ்சுவதெல்லாம் அவளை பயன்படுத்திக் கொள்ளும் பெரியவர்களின் குரூரமான அரவணைப்புதான். அது அவளை சின்னாபின்னமாக்குகிறது, அதேசமயம் அவளை ஒரு மனுக்ஷியாக அடையாளப்படுத்தும் செயலாகவும் உள்ளது.

வன்மத்தினூடாக மட்டுமே அர்த்தமுள்ள உறவுகள் நிலைநிறுத்தப்படும் வக்கிரமான உலகம் இது. 7, 8 வயது குழந்தைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட போராளிப்படையா?குழந்தைகளை இவ்வாறுகூட நடத்துவார்களா என்பன போன்ற கேள்விகளை நாம் கேட்கக் கூடும். ஆனால் இன்று உலகின் பலபகுதிகளில் எந்தவிதத்திலும் தம்மை தற்காத்துக் கொள்ள முடியாத வயதில், குழந்தைகள் துப்பாக்கி பிடிக்கப் பழகுவது என்பது வழமையாகிவிட்டது. ஒருவிதத்தில் பார்த்தால் உகாண்டா போன்ற நாடுகளில் காணப்படும் இத்தகைய போக்கின் மறுபக்கத்தை சமாதானம் நிலவும் சமுதாயங்களில் காணலாம். நமது தொலைக்காட்சிப் பெட்டிகளில் அன்றாடம் தோன்றும் சிறுவர், சிறுமியர், வயதுக்கு மீறிய பேச்சுடனும், சைகைகளுடனும் நம்மை நுகர்வுப் பண்பாட்டுக்குள் அழைக்கும் ஆபாசத்தை நாம் வாய்பேசாது, மௌன ரசனையுடன் தரிசித்து வருகிறோம். குழந்தைகளை பாலினப் பயன்பாட்டுப் பொருட்களாகப் பாவிக்கும் பண்பாட்டை மிக இயல்பானதாக நமது சந்தைசார் நாகரிகம் அடையாளப்படுத்துகிறது. நுகர்வுப் பண்பாட்டின் மிதப்பில், குழந்தைகளை கண்காட்சிப் பொருட்களாக்கி அழகு பார்க்கும் வக்கிர புத்தியின் மற்றொரு வெளிப்பாடுதான், அவர்களை பெரியவர்களின் அரசியல் கனவுகளுக்கும் அரசியலுக்கும் இணங்க வைப்பது என்பது.

இவ்வகையில், நம்மைப் பொறுத்தவரை, ‘குழந்தைப் போராளி’ ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்ணின் தன்வரலாறாக மட்டுமல்லாமல், நாம் வாழும் காலஇணைவிற்கான சாட்சியமாகவும் அது உள்ளது.பல ஆண்டுகளாக போரால் அலைக்கழிக்கப்படும் ஈழத் தமிழர்களின் முயற்சியில் இந்நூல் வெளிவந்துள்ளது பொருத்தமே. ஈழ (இந்திய)ச் சூழல்களில் நேரடியாகச் சொல்லமுடியாத செய்திகளை இத்தகைய நூல்கள் வாயிலாகப் பதிவு செய்ய முடிகிறது.

தமிழுக்குள் இது வரையிலும் வராத செய்திகளை கவனமாகவும் அமைதியாகவும் தேவா மொழிபெயர்த்துள்ளார். போர், போராட்டம் என்றாலே வீரம், வீரமரணம், தியாகம் என்று எண்ணும் தமிழ்ச் சமுதாயத்தில் போர் என்பதன் உள்ளார்ந்த நாசகரமான அபத்தத்தை ‘குழந்தைப் போராளி’ ஆரவாரமின்றி சுட்டுகிறது. ஈழத்திலும் பிற இடங்களிலும் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களுக்கு அரசியல் நியாயங்கள் ஆயிரம் இருந்தாலும் குழந்தைகளின் கண்களினூடாக நோக்குகையில், அந்நியாயங்கள் சுக்குநூறாகி விடக்கூடும் என்பதை இந்தப் புத்தகம் காட்டும் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

குழந்தைப் போராளி: சைனா கெய்ரற்சி
தமிழில்: தேவா
நன்றி: புதுவிசை/ கீற்று

http://www.udumalai.com/kulanthai-peroli.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சாதியும் நானும் – பெருமாள் முருகன்

அண்மையில் ஜெயமோகன் எழுதிய, ‘நேருக்கு நேராகப் பேசும்போது‘  கட்டுரை படித்தபோது பெருமாள் முருகன் தொகுத்து வெளிவந்த ‘சாதியும் நானும்’ கட்டுரை நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூல் பற்றி முதலிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்தபின்தான் இதைச் செய்வதற்கான உந்துதல் கிடைத்திருக்கிறது.

‘சாதியும் நானும்’ தொகுப்பு நூலை ஒரு புதுமையான, துணிச்சலான முயற்சி என்று சொல்லலாம், பெருமாள் முருகனையும் சேர்த்து 32 பேர் தங்கள் சாதியையும் இளவயதிலிருந்து அது தங்கள் வாழ்வில் தங்களை பாதித்த விதத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் தலித் மற்றும் மிகவும் பின்தங்கிய (சேவை) சாதிகளில் பிறந்தவர்களே கட்டுரையாளர்களில் அதிகம். இவர்களில் நிறைய பேர் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் 1970களிலும் 80களிலும் பிறந்தவர்கள். 60களில் பிறந்தவர்கள் பெருமாள் முருகனோடு சேர்ந்து மிகச் சிலரே. ஒரே ஒரு பிராமணர்தான் இதில் உண்டு, அதில் ஒன்றும் வியப்பில்லை. மூன்றே மூன்று பெண் கட்டுரையாளர்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ளனர் என்பதிலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சாதி தமிழ்நாட்டில் (இந்தியாவிலுமே) ஒரு proverbial elephant in the room. எல்லார் கண்ணுக்கும் தெரியும், ஆனால் யாரும் வெளிப்படையாக பேச விரும்புவதில்லை. ஒரு வகையில் டாஸ்மாக்கும் சாதியும் ஒன்று என்றும் சொல்லலாம். இது இருப்பதில் யாருக்கும் விருப்பமில்லை என்று பொதுவாகத் தோன்றும். ஆனாலும் இது இல்லாமல் இருக்க முடியாது என்பதுபோல் சாதி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தச் சூழலில் பெருமாள் முருகன் எழுதியும் தொகுத்தும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ‘சாதியும் நானும்’, சமீபத்தில் வெளிவந்த முக்கியமான நூல். சாதி தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றி அந்தந்த சாதிகளைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
இந்தத் தொகுப்பில் உதவி செய்தவர்களில் இருவரான பி எழிலரசி மற்றும் கு. சின்னதுரை ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. இதிலுள்ள மற்றொரு பெண் கட்டுரையாளரான வளர்மதி அவர்களின் கட்டுரையும் முக்கியமானதொன்று என்றாலும் இந்தத் தொகுப்பில் எழிலரசி அவர்களின் கட்டுரையே என்னை மிகவும் கவர்ந்தது. குயவர் என்றும் வேளார் என்றும், குலாலர் என்றும் அழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த அவரது அனுபவக் கட்டுரை அபூர்வமான சுயசாதி விமர்சனத்தைக் கொண்டது. சுய அனுபவத்தைத் தாண்டி, தமிழ் சமூகத்தில் சாதி அளிக்கும் அதிகாரத்தைக் கைவிட மறுக்கும் இடைநிலைச் சாதிகளின் நிலையை நன்றாகவே கணித்து அரசியல் சரிநிலைகளைத் தாண்டி தமிழகத்தில் நிலவும் சாதிய யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“சாதியப் படிநிலைகளில்  இடைநிலையில் உள்ளவர்கள்தான் தங்கள் சாதி குறித்த அதீதப் பற்றும் ஒடுக்கப்பட்ட சாதியின் மீது துவேஷமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மேல் சாதியினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டும் அவர்களின் பழக்கவழக்கங்களைப் பரப்பத் துணை புரிபவர்களாகவும் செயல்படுகின்றனர். மேல்நிலை மக்களின் மனநிலைக்குச் செயல் வடிவம் கொடுப்பவர்கள் போன்றும் மக்களிடையே அதீத பிம்பத்தை உயர்த்திக்கொள்ளவும்,தலித் மக்களிடையே அதீதச் சாதி ஒடுக்குமுறைகளைக் கையாளுகின்றனர். எல்லாம் ஒண்ணுதான் என்று தலித் மக்கள் கிளம்பிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை மனோபாவமாகக்கூட இதைப் பார்க்கலாம். சாதி முறைகளில் தலித் மக்களோடு நெருங்கி வாழ்கின்ற சூழல் உடையவர்கள்தான் அவர்களை வெகுவாகப் புறக்கணித்து பல நிலைகளில் துன்புறுத்தவும் செய்கின்றனர். அவ்வகையில் குயவர்களையும் அப்படிப்  பார்க்கலாம்,” என்று தன் சாதியை அரிதான ஒரு சுய விமர்சனப் பார்வையோடு விமரிசிக்கிறார் எழிலரசி.
இது தவிர, இன்னொரு குறிப்பிடத்தக்க கட்டுரை கு. சின்னதுரை எழுதியது. இந்தக் கட்டுரை இன்னொருவரின் சாதியைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது  என்பதையும் இன்னமும் தலித் சாதியினர் வெளிப்படையாக தங்கள் சாதியை சொல்லிக்கொள்ள முடியாத நிலை இருப்பதையும் காட்டுகிறது. ஒரு பேருந்துப் பிரயாணத்தின்போது அவருக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு சிறுகதையின் சுவாரசியத்தோடு விவரித்திருக்கிறார் சின்னதுரை.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக வலைப்பக்கங்களிலும் சிற்றிதழ்களிலும் காணக் கிடைக்கும் பார்ப்பன எதிர்ப்பு அதிக அளவில் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதிக அளவு என்று சொல்வதுகூட தவறு 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஒரே ஒரு கட்டுரைதான் சாதியமைப்பைப் பார்ப்பனரோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது.  தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகமும் கட்டுரையாளர்கள் என்பதால் ஆதிக்க சாதியினர் அநேகமாக கவுண்டர்கள் அல்லது வன்னியர்களாகவே  இருக்கிறார்கள். இவர்களைத்தவிர  தமிழகத்தின் மேற்குப் பகுதிகளின்  தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிகளும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தக் கட்டுரையாளர்களின் வசிப்பிடங்களான கிராமங்களில் அநேகமாக பார்ப்பனரே இல்லை என்றுகூட இக்கட்டுரைகளைக் கொண்டு சொல்லிவிடலாம். இந்த நிலை பெருமாள் முருகனின் நாவல்களிலும் சிறுகதைகளிலும்கூட காணக் கிடைக்கும் ஒன்று. இந்த நூலுடன் சேர்த்து அவரது சமீப நாவல்களான ஆளண்டாப் பட்சியையும் பூக்குழியையும் படித்தால் தமிழகத்தின் சாதியமைப்பைக் குறித்தும் சாதிகள் கிளை பிரிந்து புது சாதிகள் உருவாகும் விதம் குறித்தும் ஒரு மாறுதலான சித்திரம் கிடைக்கும்.
பிராமண வகுப்பைச் சார்ந்த ஒருவரின் கட்டுரை இதில் இடம் பெற்றுள்ளது. அது இன்னமும்கூட விரிவானதாக இருந்திருக்கலாம். என் அனுபவத்தில் பிராமண அடையாளம் என்பது இன்று  இருமுனையும் கூரான கத்தியைப் போன்றது. ஆனால் இந்தக் கட்டுரை அந்த அடையாளத்தின் ஒரு பக்கத்தை (பாதிப்பு ஏற்படுத்தும் பக்கத்தை) மட்டுமே பேசியிருக்கிறது. பிற ஆதிக்கச் சாதியினரின் அனுபவப் பதிவுகளும் குறைவுதான். அவர்களின் கட்டுரைகளிலும்  தங்களுக்கு கீழுள்ள படிநிலையில் உள்ளவர்களை தாங்கள் நடத்தும் விதம் குறித்த குற்றவுணர்வு அவ்வளவு அழுத்தமாக இல்லை.
பெருமாள் முருகனின் கட்டுரை உட்பட, இந்தக் கட்டுரைகளில் தமிழகத்தில் சாதியமைப்பின் உருவாக்கம், அதன் நீடித்த தொடர்ச்சி ஆகியன குறித்து ஆழமான விசாரணைகள் ஏதும் இல்லை என்பது இந்நூலின் முக்கியமான குறை. அதிலும் குறிப்பாக, கிராமப்புர சமூக அமைப்பில் முழுமையான மேலாதிக்கம் செலுத்தும் சாதியினர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்று வரும்போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் வகைப்படுத்திக்கொண்டு பெற்றுக் கொள்ளும் இரட்டை அதிகார வாய்ப்பு குறித்த கேள்விகளே இந்தக் கட்டுரைகளில் இல்லை (இடைநிலைச் சாதிகளின் இந்த இரட்டை அதிகார வாய்ப்பு குறித்து முன்பு காலச்சுவடில் ரவிக்குமாரின் ஒரு நல்ல கட்டுரை வெளிவந்தது. இப்போது அவர் அம்மாதிரி கட்டுரைகள் எழுதும் நிலையில் இல்லை). தலித்துகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும்கூட அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தங்கள் உயர்வுக்கு ஒரு காரணமாக இருப்பது குறித்து இன்னமும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சேவைச் சாதிகளைச் சார்ந்த  வண்ணார், குயவர், நாவிதர் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களும் தலித்துகளும் தங்கள் சாதி அடையாளங்களை வெளிப்படையாகப் பதிவு செய்து அதனால் தாங்கள் அடைந்த துயர்களை முன்வைக்கும் விதமாக இந்த நூல் வெளிவந்திருப்பது ஒரு முக்கியமான நிகழ்வேயாகும். அதுவும் பெரும்பாலான கட்டுரையாளர்கள் சமூக நீதியை அடைவதில் வெற்றி பெற்ற திராவிட இயக்கங்களின் ஆட்சிகளின்போது, 70களுக்குப் பின்னும் 80களிலும், பிறந்தவர்கள் என்று எண்ணும்போது சாதி ஒழிப்பில் தமிழகம் அடைந்துள்ள “முன்னேற்றம்” சிந்திக்க வைக்கிறது.
மனிதர்கள் குழு அடையாளங்களை துறப்பது அவ்வளவு எளிதானதல்ல என்றே இந்நூல் முடிவில் உணர்த்துகிறது, மானுடவியலாளர் டெஸ்மாண்ட் மாரிஸ், சமூகம் எவ்வளவு நவீனம் அடைந்தாலும் ஒரு தனி மனிதனின் சுற்றம் என்பது அதிகம் போனால் 300 பேருக்கு மேல் போகாது என்றும் இது அவன் இனக்குழு வாழ்விலிருந்து தொடர்வது என்றும் குறிப்பிடுவார். இந்த இனக்குழு வாழ்வு இருபதாம் நூற்றாண்டிலும் மிஞ்சியிருப்பதே இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள சாதி என்று கருதுவதற்கு நிறைய இடமிருக்கிறது.  இந்திய சமூகச் சூழலில் அந்த 300 பேரில் முக்காலே மூணு வீசம் பேர் சுயசாதியினராகத்தான் இருக்க முடியும்.
இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது நவீனத்துவம் சாதிகளை ஒழிக்கும் என்று இன்னமும் யாரும் நம்புவது இல்லை என்றே தோன்றுகிறது என்றால் இந்நூல் அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஒரு மேம்போக்கான குற்றவுணர்வு இருப்பது போல் பட்டாலும் எந்தச் சாதியினருமே தங்கள் சாதி அடையாளத்தைத் துறப்பதற்கு தயாராக இல்லை. மேலும், இன்று அடையாள அரசியலும், சாதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டு முறையும் ஸ்திரப்பட்டுவிட்ட நிலையில், சாதி அடையாளங்களைப் பேணுவதே ஒரு தனிமனிதனுக்கு லாபமாக இருக்கிறது என்பதும் நிதர்சனம்.
இந்த தொகுப்பு நூல் உருவான விதம் குறித்தும் பொதுவாக சாதிகள் குறித்தும் பேசும் பெருமாள் முருகனின் முன்னுரை முக்கியமானது. இந்த முன்னுரை  அவரது தளத்திலும்  காணக் கிடைக்கிறது.
சாதிகள் குறித்து பேசும்போது அநேகமாக பார்ப்பனர்கள் குறித்தே பேசாத, அதிகமும் இடைநிலைச்சாதிகளையும், பார்ப்பனரல்லாத மேல்சாதிகளையுமே ஆதிக்கச் சாதிகளாக  அடையாளப்படுத்தும் இந்த நூல், சாதியம் பார்ப்பனச் சதி என்றும் பார்ப்பன ஆதிக்கம் மறைந்தால் சாதி பேதங்கள் மறைந்துவிடும் என்றுமே நம்பி, தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்து வந்த பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, ஒரு அழகிய  முரண்.
சாதியும் நானும், அனுபவக் கட்டுரைகள், by perumaal murugan.

நன்றி 
வெ.சுரேஷ்

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sathiyum-nanum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.

அப்போது உதவியது, இப்போது சாத்தியமா? நாடாளுமன்றத்தை அச்சுறுத்தும் செயல் அல்லவா இது? ஜனநாயகத்துக்கு எதிரான பிளாக்மெயில் அல்லவா? லோக்பால் வந்துவிட்டால் ஊழல்கள் எல்லாம் ஒழிந்துவிடுமா? தாக்குதல்களும் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் பொங்கி வந்தன.
மற்றொரு பக்கம், அண்ணாவின் போர் முழக்கத்துக்கு இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் லட்சக்கணக்கான சாமானியர்கள் திரண்டு வந்தார்கள்.
நடைபெற்றது நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் எதிரான மாபெரும் யுத்தம். சத்தியத்துக்கும் ஊழலுக்கும் எதிரான தர்ம யுததம். எனவேதான் அண்ணா ஹசாரேவின் வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகவும் மக்கள் சக்தியின் வெற்றியாகவும் இன்று இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
‘இன்றைய காந்தி’ என்ற புகழ்பெற்ற நூலின்மூலம் காந்தி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலை அளித்துள்ள ஜெயமோகன், இந்தப் புத்தகத்தின்மூலம் அண்ணா ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பரப்பப்பட்டிருக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் தெளிவான பதிலை முன்வைக்கிறார். அத்துடன் காந்தியப் போராட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மிக அழகாக விளக்குகிறார்.
ஊழலை எதிர்க்கும், ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் அவசியமாகப் படிக்கவேண்டிய புத்தகம் இது.

இணையத்தில் வாங்க 

http://www.udumalai.com/anna-hazare-uulalulku-yethirana-gandhiya-porattam.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எழுதியவனைக் கண்டுபிடித்தல்

ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்த காலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிம மொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இது தான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான்.

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/ezhuthiyavanai-kandupidithal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நீதி நூல் களஞ்சியம் (23 நூல்கள் உரையுடன்)

நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு,திரிகடுகம்,ஏலாதி,இன்னிலை முதுமொழிக்காஞ்சி,அறநெறிச்சாரம்,நீதிவெண்பா,நீதிநெறி விளக்கம்

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/neethi-nool-kalangiyam-karpagam.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

விளையாட்டு புத்தகங்கள்

விளையாட்டு புத்தகங்கள் இணையத்தில் வாங்கhttp://www.udumalai.com/games-books.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எஸ்.ராமககிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன்

எஸ்.ராமககிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன்

 'சொல் ஆளுமை' என்பதை நண்பர்கள் பேசுகையில் சில நேரம் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்த சமயங்களில் உணர்ந்ததுண்டு. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே இருக்க மாட்டார்களா என்ற எண்ணிய தருணங்கள் அவை. நேரில் பாவனைகளுடன் நம்மை ஈர்ப்பது கடினமான பணியென்றால் சிறுகதைகளின் வாயிலாய் நம்மை கட்டிப்போட்டு இடம், காலம் இவற்றையெல்லாம் மறந்து நம்மை கதைகளினூடே பயணிக்க செய்யும் எஸ்.ரா வின் ஆளுமையை இந்த சிறுகதை தொகுப்பின் முதல் கதையான "காந்தியோடு பேசுவேன்" எனும் கதையிலிருந்தே உணர முடிந்தது.

              பால்ய வயதிலேயே ஒரு 'முரட்டு' கணவனுடன் திருமணமான ஒரு பெண், பெரும்பாலும் தனிமையிலியே காலத்தை கடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு சூழ்நிலையில் கைக்குழந்தையை கூட விட்டுவிட்டு காந்திஜியை காணக் கிளம்பிவிடுகிறாள். அவளுடைய உணர்வை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அவள் பிள்ளை கதை சொல்வதாக பின்னப்பட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான பதிவு இது. காந்தியைப் பின்புலமாக கொண்ட கதைகள் எல்லாவற்றிலும் இது தனித்தே நிற்கிறது.

              'கடக்க முடியாத பாலம்என்னும் சிறுகதை சாதி, மதத்தின் பெயரால் வன்முறை விளைவிப்போரை சாடும் கதை. கதை சொல்ல எடுத்தாண்ட சொற்கள்  ஒவ்வொன்றும் காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது. ஒரு கட்டத்தில் படிப்பதை மறந்து நாம் பாத்திரமாகவே மாறி வன்முறையாளர்களின் வெறிச்செயலுக்கு பலியாவது நாம்தான் என்ற மாயபிம்பத்தை தோற்றுவிப்பதே எழுத்தாளரின் தேர்ந்த எழுத்துக்கு சாட்சி. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை'பாதியில் முடிந்த படம்' . நிருபமா என்ற பெண்ணை திரைப்பட விழா ஒன்றில்  சந்திக்கும் ஒரு பத்திரிக்கையாளன், அவளுடன் நட்பாகி பின் அவளிடம் தன் மனதை தவணை முறையில் கொடுத்துவிட்டு தவிக்கும் தவிப்பை கதையின் கடைசி வாக்கியங்கள் அழகாய் எடுத்தியம்பும்,

           எழுத்தாளர் 'லியோ டால்ஸ்டாய்' அவர்களின் வாழ்க்கை சம்பவம் ஒன்றை சுவைபட சொல்லியிருக்கும் கதை 'அஸ்தபோவில் இருவர்'. முதுமையில் தன் காதல் மனைவி சோபியாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு புறப்படும் டால்ஸ்டாய் அதற்கான காரணங்களையும், பின் குடியானவன் ஒருவனின் பேச்சில் தன் தவறை உணர்ந்த போதும் தான் இறக்கும் வரை தன் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலே போகுமிடத்தில் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போகிறது.

              'அருவிக்கு தெரியும்', 'பிடாரனின் மகள்', 'ஷெர்லி அப்படித்தான்' 'இடைப்பட்ட நாட்கள்' ஆகிய கதைகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.'நிகழ்காலத்தின் சுவர்கள்என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைபதைப்பை மூன்று பக்கங்கள் முடியும் வரை நீட்டிச் செல்கிறது. 'பசித்தவன்என்ற கதையில் திடியனின் வாழ்கையோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் ஆசிரியர். 'ஒற்றை முள்' எனும் கதையில் கண்டிப்பான தந்தையை வெறுக்கும் தனயன் கடைசியில் தன் தந்தையின் நேசத்தை உணரும் கதையில் அந்த உடைந்த இசைத்தட்டுக்கு பின்னால் இருக்கும் இரகசியத்தை படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நினைக்கும்படி சுவாரஸ்யமாய் சொல்லியிருப்பது அருமை.


               எஸ்.ரா அவர்களின் சிறுகதைகள் பல வாசித்திருக்கிறேன் என்ற போதும் அவருடைய நாவல்கள் இதுவரை வாசித்ததே இல்லை. இந்த 'காந்தியோடு பேசுவேன்' என்ற தொகுப்பை படித்தவுடன் உடனே அவருடைய நாவல் ஏதாவது ஒன்றை படித்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. வாசகர்கூட நண்பர்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்து உடனே ஆரம்பிக்க வேண்டும்.

நன்றி.
வாசகர்கூடம் இணையத்தில் ஆர்டர் செய்ய

http://www.udumalai.com/gandiyodu-pasuven-s-ramakrishnan.htm


 தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Tuesday, 25 November 2014

சுந்தர ராமசாமி கவிதைள்சுந்தர ராமாசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலததின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை அலசுகின்றன.அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன.அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டது போல கோட்பாடுகள் சார்ந்து அமைவதில்லை.

http://www.udumalai.com/sundara-ramasamy-kavithaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பினை இணையத்தில் வாங்க:http://www.udumalai.com/jeyamohan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

"பொம்மை' இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.​ எழுதிய மிகச் சிறப்பான தொடர் "திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்'.​ சினிமா ரசிகர்களிடையே மிகப் பரவலான கவனத்தையும்,​​ வரவேற்பையும் பெற்ற இத்தொடரை தொகுத்து "எம்.ஜி.ஆர்.​ எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்னும் பெயரில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது விஜயா பப்ளிகேஷன்ஸ்.
​ ""ஆசை,​​ நம்பிக்கை இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பும்,​​ உறவும்தான் எத்தனை வலிமை பொருந்தியது தெரியுமா?​ எத்தனை எமன்கள் வந்தாலும்,​​ மனித எதிரிகளே வந்தாலும்,​​ தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்,​​ இந்த இரண்டும் பிரிவதோ,​​ இவைகளைப் பிரிக்க முயலுவதோ இயலாத காரியம்.​ என்னுடைய வெற்றிகள் என்று எவையேனும் இருந்திருக்குமாயின்,​​ அதற்கு எனது தோல்வியினால் நான் தெளிவு பெற உதவிய,​​ நியாயமான முடிவுதான் காரணம் என்பதைத் துணிவோடு,​​ ஆதாரத்தோடு என்னால் கூற முடியும்.
​ ​ மனிதனாக இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கின்றோம்.​ இந்தப் பிறவியில்,​​ இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து,​​ ரசிப்பது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம்.​ உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை,​​ இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர்.,​​ வெளிநாடுகளில் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கான படப்பிடிப்பை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களையும்,​​ சுவையான சம்பவங்களையும் மிக விரிவாக எழுதியுள்ளதை,​​ விவரிக்கிறது இப்புத்தகம்.​ சினிமா ஆர்வலர்கள் படித்து பயன் பெறலாம்.
எம்.ஜி.ஆர்.​ எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்'​
உரு​வான கதை
தொகுப்​பா​சி​ரியர்:​ வி.வீரபத்திரன்


இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/m-g-r-eluthiya-ulagam-sutrum-valiban-uruvana-kathai.htm


தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
தூயோன் - கோபிகிருஷ்ணன்


மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//
புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

நன்றீ
அமிர்தவர்ஷினி அம்மா அவர்களுக்கு

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/jeyamohan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42