Friday 14 November 2014

ப்ளீஸ் இந்தப் புத்ஹ்

இந்தப் புத்தகத்தை வாங்குங்க என்று சொல்லும் உலகில் ஒரு புத்தகத்தின் பெயர் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க... வியப்பா இருக்கில்ல.. நீயா ? நானா ? எனக் கேட்டால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. அதன் பதில் நாம் என்பதும்,, நம்ம கோபிநாத்தின் புத்தகம்தான் அது என்பதும் ,,. சிக்ஸ்த் சென்ஸ் வெளியிட்டுள்ள இதன் விலை அறுபது ரூபாய்(60 Rs).. பர்சனாலிடி டெவலப்மெண்ட்... பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங் என்பதன் விளக்கம் இது ..

அவருக்குக் கிடைத்த வாய்ப்பில் அறிந்து கொண்டவற்றை அவர் நம்மில் ஒருவராகப் பகிர்ந்து கொள்கிறார்.. நாம் ஓடிக்கொண்டிருக்கும் திசையின் இலக்கு என்ன என்று யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் பயன்படலாம். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது கால்குலேட்டர் உபயோகிப்பதுபோல் இந்தப் புத்தகம் பயன்படும் என்கிறார் தன் முன்னுரையில்..

தன்னம்பிக்கைக்கு் தன்னடக்கத்திற்கும் முழுமையான உதாரணம் கோபிநாத்,..ஏறக்குறைய 14 விதமானவர்களுக்கு நன்றி கூறி தன் தன்னம்பிக்கையை தன்னைவிட அதிகமாய் நம்பும் தன் அப்பாவுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறார்...

15 கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இது..

இணையத்தில் ஆர்டர் செய்ய: www.udumalai.com
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment