Sunday, 21 December 2014

பூமணியுடன் ஒரு சந்திப்பு


பூமணியுடன் ஒரு சந்திப்பு: சாகித்ய விருதால பெருமைப்பட ஏதுமில்ல!

தமிழின் மகத்தான படைப்புகளுள் ஒன்றான பூமணியின் ‘அஞ்ஞாடி…’ இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறது. இது பூமணிக்கும் பெருமை, சாகித்ய விருதுக்கும் பெருமை!

“சின்ன வயசுல ஓணான் அடிச்சிக்கிட்டு அலைஞ்சோம். கழுதைக்குப் பின்னாடி ஓலையக் கட்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். கால்ல செருப்பில்லாம பள்ளிக்கூடத்துக்குத் தினமும் ரெண்டு கிலோ மீட்டர் நடந்தே போயிவருவோம். இல்லாத விளையாட்டுன்னு எதுவுமில்லே. மலையேறுவோம், ஓடைக்குள்ளே, கண்மாய்க்குள்ளே, ஊர்மந்தையச் சுத்தி ஓடியாடுவோம். அணில் வேட்டை, எலி வேட்டைன்னு எல்லா வேட்டையும் உண்டு. இளமைக் காலங்கிறது அவ்வளவு சந்தோசமா இல்லேன்னா எப்படி? அந்த அடியுரம் இல்லேன்னா, எழுதுறது ரொம்ப கஷ்டம்.

எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். இன்னைக்கு வரைக்கும் நான் எழுதுற மொழி, மற்ற எல்லா விஷயங்களுக்கும் அளவுகோல் அம்மாதான். எங்கம்மா சொன்ன கதைகளும், பாடுன தாலாட்டு, ஒப்பாரி எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. படிக்கிற காலத்திலேயே நான் யாப்பில் செய்யுள்கள் நிறைய எழுதியிருக்கேன். 1966-ல இருந்தே என்னோட கவிதைகள் ‘எழுத்து’ இதழ்ல வந்திருக்கு. யாப்பைக் கற்று மறந்தவன் நான். அப்படி அன்னைக்குக் கத்துக்கிட்டது இன்னைக்கி நாவலைக் கவித்துவமா சொல்லப் பயன்படுது.

வாழ்க்கைங்கிறது எப்பவுமே யதார்த்தத்திலிருந்துதானே புனையப்படும். யதார்த்தத்துல நின்னுக்கிட்டு பூக்கிற விஷயம்தான் சரியானது. இல்லேன்னா, அது இலவம் பஞ்சு மாதிரி அலைஞ்சிக்கிட்டே இருக்கும். சரக்கொன்றைனு ஒரு மரம். அது இங்கே பக்கத்துல இருந்துச்சு. இப்ப வெட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன். என் வாழ்க்கையில அதை இங்கேதான் பாத்திருக்கேன். அது பூக்குற நேரத்துல ஒத்த இலைகூட மரத்துல இருக்காது. மரமே மொத்தமா பூவாப் பூத்திருக்கும். அப்படித்தான் நான் யோசிச்சுப் பாப்பேன். இலையப் பத்தி எனக்குக் கவலையில்லே. என்னோட படைப்பு மனமும் அந்த சரக்கொன்றை மரத்தைப் போலத்தான்.

என்னோட சிறுபிராயத்து ஞாபகங்கள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவலோட மையம். சலவைத் தொழிலாளிகள் இருக்காங்கள்ல, அவங்கள புதிரை வண்ணார்னு சொல்வாங்க. அவங்க, தாழ்த்தப்பட்ட மக்களுடைய துணிகளை வெளுக்குறவங்க. அவங்களோட எனக்கும் நல்ல பழக்கமிருந்தது. அதே மாதிரி குடும்பர்கள். அவங்களோட வாழ்க்கையும் எந்த நாவல்லயும் இதுவரை முழுமையா சொல்லப்படலே. இங்கேயும் அன்பான மனிதர்களும், அந்நியோன்யமான உறவுமுறைகளும் இருக்கு. எந்த சாதியப் பத்தியும் கவலையில்லே. அன்பும் அந்நியோன்யமும் இருக்கும்போது, சாதியத் தூக்கித் தூரப் போட்டுடுவாங்க. அதுபோன்ற உறவுகள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவல்ல நிறைஞ்சிருக்கு.

வரலாற்றை நாம சரியாச் சொல்லணும். சில விஷயங்களை நாம தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லாமத் தவறிட்டோம். எல்லாஞ் சேர்த்து நமக்கு ஒரு சமூக வரலாறு முழுமையாக் கிடைக்கலே. அடித்தட்டு மக்களைப் பற்றிய ஒரு நாவல்ல அவங்களோட சமூக வரலாறும் சேர்ந்திருந்தா நல்லா இருக்குமேன்னு ரொம்ப நாளா எனக்கொரு ஆசை இருந்துச்சு. 200 வருசத்தை மனசுக்குள்ளே போட்டு ஊறவச்சிக்கிட்டு இருந்தேன். சிவகாசிக் கலவரமும் கழுகுமலைக் கலவரமும் சேர்ந்து எனக்குள்ளே ஒரு கதைக்களனுக்கான ஊற்றா உருவாச்சு.

இந்த நாவல்ல வர்ற மனிதர்களெல்லாம் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள்தான். வாழ்க்கை எவ்வளவு குரூரமாய் நம்மை வேட்டையாடினபோதும், மனித உறவுகள்ல மனிதநேயத்தோட முக்கியத்துவத்தைச் சக மனிதர்களா இருந்து நம்மிடையே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் இந்த மனிதர்கள். இன்றைக்குக் குடும்ப முறை சிதைஞ்சு உறவுகளே சுயநலமாகிடுச்சு. எப்படி இதை மீட்டெடுக்குறது? மரத்துப் போயிருக்கிற மனித உணர்வுகளைத் தட்டியெழுப்ப எழுதித்தான் தீர்க்கணும்.

இந்த நாவல்ல வெவ்வேறு வகையான மொழி வழக்குகளப் பயன்படுத்தியிருக்கேன்னு நெறைய பேர் சிலாகிக்கிறாங்க. திருஞான சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியது பற்றி எழுத தேவாரம் படிச்சேன். இதுக்காக நூறு, இருநூறு புத்தங்களப் படிச்சிருப்பேன். சேக்கிழாரோட பெரிய புராணத்துக்கு திரு.வி.க. உரை எழுதியிருக்கிறதை எல்லாமும் படிச்சேன். மதங்கள்னு உள்ளே வரும்போது எப்படிக் கோர முகத்தோட வருதுன்னு சொல்லி ஆரம்பிக்கலாமேன்னு ஒரு ஐடியா வந்துச்சு. அப்ப எட்டாம் நூற்றாண்டு, அந்த மொழில சொல்றதுதான் சரின்னு பட்டது. நான் படிச்சிருந்த சங்க இலக்கியங்கள் எனக்குப் பயன்பட்டது. இன்னமும்கூட தமிழின் சங்க இலக்கியங்களை ஒரு ரெஃபரன்ஸுக்காக எடுத்துப் படிப்பேன். இங்க உள்ள மக்களோட மொழி நமக்கு ஏற்கெனவே நல்லாத் தெரிஞ்சதுதான். அப்புறம், இவ்வளவு பெரிய நாவல்ல ஒரே மாதிரியான மொழிநடை இருக்கிறதுங்கிறதும் சலிப்பு தரக் கூடாதில்லையா, அதனாலதான் பல வழக்கு மொழிகளை அந்தந்த காலத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி எழுதினேன்...”

பெரிய பெருமிதங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் பூமணி. சாகித்ய விருதும் அவரிடம் பெரிய தாக்கங்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. “எனக்கு இந்த விருதுகள்மேல பெரிய ஆர்வம் ஏதுமில்ல. சாகித்ய விருதால பெருமைப்பட ஏதுமில்ல. ஏற்கெனவே பல விருதுகள் இந்த நாவலுக்குக் கிடைச்சிருக்கு. இப்ப நாட்டின் தலைநகர்லேர்ந்தும் ஒரு விருது கொடுத்திருக்காங்கன்னு நெனச்சிக்கலாம். ‘எமக்குத் தொழில் எழுத்து’ அவ்வளவுதான்!” சினேகமாகக் கை குலுக்குகிறார் பூமணி.

வாழ்த்துகள் சார்!

பூமணி புத்தகங்களை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/search.php?q=பூமணி

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அன்று வேறு கிழமை

எழுத்தாளர்: ஞானக்கூத்தன்

வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் ‘அன்று வேறு கிழமை’ சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/andru-veru-kilamai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

யானி இசைப்போராளி

எழுத்தாளர்: பா.ராகவன்

ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூடஇருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி.உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார். மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஜார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் வம்சத்தில் யானிக்குப் பிறகு உச்சம் தொட்டவர்களாக இன்று யாருமில்லை. பாரம்பரிய இசையின் அழகு சிதையாமல் காலத்துக்கேற்ற வடிவில் அவர் வழங்கிய இசைக்கோவைகளுக்கு அமெரிக்காவில் மெக்சிகோவில் ஜப்பானில் ஐரோப்பாவில் ஆசியாவில் சீனா இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலலும் ரசிகர்கள் உண்டு. உலகில் வேறு எந்த ஒரு கலைஞனுக்கும் தான் வாழும் காலத்திலேயே இப்படியோர் இமாலயப் புகழ் கிடைத்ததது கிடையாது.இசையுலகில் யானி நடத்திக் கொண்டிருப்பது தனி சாம்ராஜ்ஜியம்.அக்ரோபொலிஸில் நடந்த இசை நிகழ்ச்சி யானி வாழ்க்கையின் பேய்த்தனமான வெற்றி. இதன்மூலம் சர்வதேசப் புகழ் ,பணம், அங்கீகாரம் அனைத்தையும் அடைந்தார் யானி.இன்றைக்கும் யானியின் லைவ் அட் மி அக்ரோபொலிஸ் வீடியோ ஆல்பம் உலகின் மிகச்சிறந்த ஆல்பங்களில் ஒன்று. யானி, இசைக்குச் சொல்லும் இலக்கணம் வெகு எளிமையானது.மக்களுக்குப் பிடிக்கவேண்டும் அதுதான் சரியான இசை. மக்களின் நாடி நரம்புகளில் வியாபித்து அவர்களின் மனத்தை வயப்படுத்திய மகா இசைக்கலைஞனின் சுவாரஸ்யமான வாழ்க்கை பரவசத் தமிழில்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/yaani-isaiporali.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அக்னி

சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.

சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.

நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எந்த ஒரு மரணமும் இதுவரை நிகழ்ந்ததில்லை. முற்றிலுமாக எரித்தபின்பும் சாம்பலை மிச்சம் வைக்கிறது அக்னி. வாழ்க்கை தீர்ந்துபோனால் மரணம் என்பது உண்மையெனில், இந்தப் பத்திரிகையாளருக்கு மட்டும் எப்படி இறந்தபிறகு தொடங்குகிறது வாழ்க்கை?

மென்மையான உரையாடல்கள். அழுத்தமான கதை. இ.பாவின் அரசியல் தொடாத மிகச் சில நாவல்களுள் ஒன்று இது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/agni.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பொன்னிறப் பாதை

எழுத்தாளர்: ஜெயமோகன்

" ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும். அந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை. கால் விளங்கவில்லை. காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச்சாரத்துக்குச் செய்யப்படும் ஒர் நுண் அவமதிப்பு. "

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ponnira-pathai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

புறப்பாடு

அனுபவங்களை காலவாிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம்.கடிகாரக் காலம்.அது அா்த்தமற்றது.அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது.

அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே.அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வாிசையை அமைத்து விடுகின்றன.நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன்.அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒனறு தென்படும்.அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன்.அதன் வழியாக அப்போது-அதாவது எழுதும் கணத்தில்-ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/purapadu.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வெண் கடல்

எழுத்தாளர்: ஜெயமோகன்

அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலைவரிசையில் எழுதப்பட்ட பதினொரு கதைகளின் தொகுப்பு வெண்கடல்.

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன.

பெரும் பிரபஞ்ச இயக்கத்தில் சிறு துளியாக இருக்கும் மனித வாழ்வினை அதன் தருணங்களின் வழியேதான் நினைவு கூரவோ அடையாளப் படுத்தவோ முடிகிறது. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள். இதில் வரும் மனிதர்களின் வழியே நாம் சந்திக்கவிருக்கும் அந்த நிகழ்வுகள் இதற்கு முன்போ அல்லது இனியோ நம் வாழ்வில் நிகழ்ந்த, நிகழ இருப்பவை.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/venkadal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Saturday, 20 December 2014

பிறகு

பிறகு கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படு்த்தியிருக்கும் பூமணிஈ காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது

                                          தேவிபாரதி

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/piraku.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வெக்கை

பூமணியின் வெக்கை

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பூமணி சிறுகதைகள்

எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்.

எளிய மனிதர்களாலான ஓர் உலகம் எப்படிச் சிக்கலானதாக இருக்க முடியும் என்பதை இக்கதைகளின் வழியே ஆராய்கிறார் பூமணி. விவசாயச் சமூகம் பற்றிய பொதுப் புரிதலுக்கப்பால் அதன் நுட்பமான உள்ளடுக்குகளில் பயணம் செய்யும் இக்கதைகள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் பரப்பை வெகுவாக விரிவுபடுத்துபவை. கலை அனுபவமாக வாசக மனதில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்குபவை.

தன் மனிதர்களிடையே புழக்கத்திலிருக்கும் சொற்களைக்கொண்டு ஒரு கலைஞனால் எந்த அளவுக்கு ஆற்றல்மிக்க பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளைத் தயக்கமின்றி உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/poomani-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அஞ்ஞாடி

அஞ்ஞாடி

 கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான். ‘அஞ்ஞாடி…’ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல் ….
பூமணியின் மொழிக் கட்டுப்பாடு: பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலைசெய்மு கொண்டிருப்பதால் ‘சொகமாக’ --- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது ----- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு. பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்பி இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு சாகத்திய அகாடமி விருது பெற்ற நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/anchadi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதிர்மறையான சூழலில் ஒரு கலைஞனின் கலைத் தேடலைச் சிலிர்ப்பூட்டும் விதம் சொல்லும் 'லங்கா தகனம்' என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரிவானது. இலக்கியத்தை அழகனுபவமாகவும் ஆன்மீக அனுபவமாகவும் கருதும் வாசகர்களுக்கான ஆக்கங்கள் இவை.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/jeyamohan-kurunavalgal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Friday, 19 December 2014

அகிலன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)


 மொத்தம் 200 சிறுகதைகளின் தொகுப்பு

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/akilan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Thursday, 18 December 2014

ராஜீவ் காந்தி கொலை

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளே... விசாரணையின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ராஜீவ், சர்வதேச சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பது உண்மை. அதைவிட உண்மை, அந்தச் சதியை நடத்தியவர்கள் இன்னும் சிக்காமல் இருக்கிறார்கள் & என்பதே வழக்கறிஞர் துரைசாமியின் வாதம். ராஜீவ் கொலைக்கு முன்பும், பின்பும், விசாரணையின் போதும் எழுந்த நூற்றுக்கணக்கான கேள்விகளை துரைசாமி இந்தப் புத்தகத்தில் எழுப்புகிறார். ராஜீவ் வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த போதும், அந்த விசாரணையின் போதும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இக்கேள்விகளை கடந்த 22 ஆண்டுகளாக எழுப்பி வருபவர் வழக்கறிஞர் துரைசாமி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், தன்னுடைய பல்வேறு சட்ட அனுபவங்களின் காரணமாக இந்நூலை தெளிவாக வழங்கியுள்ளார். இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த ஒருவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும், ஒரு வழக்கை எப்படி நுணுக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்ற துல்லியத்தையும் இந்நூலைப் படிக்கும் போது வாசகர்கள் உணர முடியும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/rajivghandi-kolai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நேரு: உள்ளும் புறமும்

இந்தியா சுதந்தரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவாஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமுமாக இருந்தன.
இன்று இந்தியா பெருமளவில் உருமாறிவிட்டது என்றாலும் நேருவின் லட்சியமும் அணுகுமுறையும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது தாத்தா
குறித்துத் தீட்டியிருக்கும் சித்திரம் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, நேருவின் அணிசேராக் கொள்கை உருவான பின்னணி குறித்தும் இதையே அடிப்படையாகக் கொண்டு நேரு வகுத்துக்கொண்ட சர்வதேச அரசியல் உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தோனேஷியா, வியத்நாம் ஆகிய நாடுகளை நேரு எவ்வாறு அணுகினார், இந் நாடுகளுடன் எத்தகைய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்பதை நேரு மற்றும் பிற தலைவர்களின் பிரத்தியேக ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.
நான், என் நாடு, என் மக்கள் போன்ற குறுகிய எல்லைகளைத் தகர்த் தெறிந்து ஒட்டுமொத்த உலகின் பிரச்னைகள் குறித்துத் தெளிவாகச் சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட ஓர் அதிசய மனிதா¤ன் கதை இது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nehru-ullum-puramum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சூரியனைச் சுற்றுகிறது பூமி

எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்

இரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ‘கலிலியோ’; இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் ‘கல்’. அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அரசும் அதிகாரமும் மதமும், அறிவியலை எந்த அளவு ஒடுக்கின என்பதற்கு கலிலியோவின் வாழ்வு ஒரு உதாரணம். கலிலியோவின் இடைவிடாத போராட்டத்தின் வெற்றியே இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான வளர்ச்சி. அந்த அளவில் கலிலியோ நாடகம் மிக முக்கியமான ஒன்று. எட்வர்ட் பாண்ட், புகழ்பெற்ற பிரிட்டீஷ் நாடக ஆசிரியர். ‘கல்’ நாடகம் 1976இல் வெளியானது. இது ஒரு உருவகக் கதை போல அமைந்துள்ளது. இந்த நாடகம் உலகின் பல்வேறு நாடகப்பள்ளிகளில் பாடமாக வைக்கபட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suriyanai-sutrukirathu-boomi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

காஷ்மீர்

எழுத்தாளர்: பா. ராகவன்

 காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுதியாக இருக்கிறது காஷ்மீர். ஏன்? பாகிஸ்தான் தான் காரணமா? வேறு எந்தக் காரணமும் இல்லையா? தமிழில் முதல் முறையாக, காஷ்மீர் பிரச்னையின் அடி ஆழம் வரை அலசிப் பிழிந்து எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
சரித்திரம் முழுதும் ரத்தம். சகிக்க முடியாத பெரும் தலைவலி. நூற்றுக்கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டுவெடிப்புகள். உயிர்ப்பலி. ‘நாங்கள் இந்தியர்கள் இல்லை, பாகிஸ்தானிகளும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம். பிரிவினைப் போராட்டங்கள். காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான்வசமும் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டமும் இல்லை?

எத்தனை யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகள்! இன்றுவரை காஷ்மீரில் உள்ள இமயம் பனி மலையாக அல்ல; எரிமலையாகவே இருக்கிறது. காஷ்மீர் என்பது உண்மை-யிலேயே தீர்க்க முடியாத பிரச்னைதானா?

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/kashmir-pa-ragavan.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கடலில் ஒரு துளி

 ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர்  எழுதிய இந்தப் பத்தி சங்க இலக்கியம் அவளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம் இந்திய  இலக்கியத்தின் போக்குகள் உலக இலக்கிய தரிசனங்கள் ,சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த  அங்கதமும் கூர்மையான அவமானமும்கொண்ட விமர்சனங்கள் , நாடகம் குறித்த பார்வைகள் எனப் பல்வேறு தளங்களில் விரிந்து செல்கிறது.நமது காலகடடத்தின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவரான துளி இந்த நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kadalil-oru-thuli.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பின்தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர்: ஜெயமோகன்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தரகய எழுச்சி வீழ்ச்சிகளினாலானதே வரலாறு. அப்படியெனில் இக்கனவுகள் கொண்ட கோடிக்கணக்கான பலிகளுக்கு என்ன அர்த்தம்? இலட்சியவாதம், தியாகம் ஆகியவை வரவாற்றின் பெரும்பரப்பில் எப்படிப் பொருள்படுகின்றன? ஓர் இடதுசாரி அறிவுஜீவியினூடாக இவ்வினாக்களின் அலைகள் குமுறி ஓய்வதன் கதை இந்நாவல்.மானுட அறத்தின் அடிப்படைகளைக் குறித்த ஒரு தேடல்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pin-thodarum-nilalin-kural.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

காமராஜ்

எழுத்தாளர்: நாகூர் ரூமி

காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்!

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kamaraj.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Monday, 15 December 2014

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு

எழுத்தாளர்: தந்தை பெரியார்

தோழர் செல்வேந்திரன் அவர்கள், திராவிடர் கழகக் காரியங்களில் முழு ஈடுபாட்டுடனும் தந்தை பெரியார் சொல்லும் கட்டளையை நிறைவேற்றியும் செயல் வீரர்கள் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள் மற்றும் போரட்டங்கள் இவைகளில் கலந்து கொண்டும் தந்தை பெரியாரின் உள்ளத்திலும் திராவிடர் கழகத் தோழர்களின் உள்ளங்களிலும் மிகப் பெரிய அன்பை ஆழமாகப் பதியவைத்துக் கொண்டவர்.

                                           *நாகை எஸ்.எஸ்.பாட்சா    

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/marakkapatta-maveerarkalin-marakka-mudiyatha-varalaru.htm        

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உ.வே.சா.பன்முக ஆளுமையின் பேருருவம்

எழுத்தாளர்: பெருமாள் முருகன்

பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே.சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்த செம்மையாகச் செய்த அவர் பல்வுறு தளங்களி் ஆளுஐம கொண்டவர். மிகுந்த புலமையாளர். உரையாசிரியர். உரைநடை எழுத்தாளர். தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெ விருப்புடைய ஆவணக்காரர். சிறந்த ஆசிரியர் என அவரைப் பலவாறு கணிக்கலாம். அவர் தம் துறை சார்ந்த சார்புகளும் உடையவர். அவரையும் அவரது பணிகளையுமு் மதிப்பிடும் கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில், தமிழ் ஆய்வுக்களத்தில் நல்ல பங்களிப்பகளைச் செய்த அறிஞர்களின் கட்டுரைகளும் சமகால எழுத்தாளர்களின் கட்டுரைகளும் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/u-vey-sa-panmuga-alumaiyin-peruruvam.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

எழுத்தாளர்: மருதன்

• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை.
• மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.
• ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு.
• லத்தின் அமெரிக்காவின் ஆன்மாவாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை.
• ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி.
• சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம்.
• சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை.
• அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும்.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ulagai-maatriya-puratchialargal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நகுலன் கதைகள்

ஐந்து நெடுங்கதைகள்
முப்பத்திரெண்டு சிறுகதைகள்
இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகள்
ஆக
முப்பத்தொன்பது கதைகளின் தொகுப்பு
அனைத்திலும் நகுலன்களின்
நடமாட்டம்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/nagulan-kathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அமெரிக்கக்காரி

அமெரிக்கக்காரி

எழுத்தாளர்: அ.முத்துலிங்கம்

உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்சுகளைத் துல்லியாமாகவம் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை ,அமெரிக்கா,ஆப்பரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் ஏமாற்றமம் இடர்ப்பாடுகளும் மாறுவதில்லை.ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயதில்லாத களங்களில் நிகழும் இக்கதைகள் வாழ்வின் வியிப்பும் விரக்தியும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகும் அபத்தமும் நிறைந்த தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்தும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/americakari.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வாழ்விலே ஒரு முறை

வாழ்விலே ஒரு முறை

எழுத்தாளர் : ஜெயமோகன்

 வாழ்பனுவங்கள் ஒரு கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும் போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும்.அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுதுவதற்கான முயற்சிகள் இவை.அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான்.அனுபவங்கள் இயல்பானவை.ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது.அங்கு புனைவு வந்து சேர்கிறது.என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா  அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. 'இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்' என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி  பற்றி அதைச் சொல்லத் துணிவேன்..

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/valvile-oru-murai.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வேர்ப்பற்று

எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி

1946&ல் தொடங்கும் இக்கதை 1952&ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் கால- கட்டத்தில் நடக்கும் கதையெனினும் இது சொல்வது ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அழுத்தமான மனப்போராட்டங்களை மட்டுமே

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/verepatru.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Friday, 12 December 2014

பெண்களுக்கான புத்தகங்கள்

பெண்களுக்கான புத்தகங்கள்

இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/penkalukkaka-books.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இன்றைய காந்தி

இன்றைய காந்தி

எழுத்தாளர்: ஜெயமோகன்

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார். பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது.

உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/indraya-gandhi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆன்மிக சிந்தனைகள்

பாலகுமாரனின் ஆன்மிக சிந்தனைகள்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/aanmeega-sindhanaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகம் சுற்றும் தமிழன் (ஏ.கே. செட்டியார்)


”இவர் தரங்கம்பாடியில் வசித்த காலத்தில் அங்க ரயில் கிடையாதாம். சீகாழி ஸ்ரீமான் அ.ப.முத்துத் தாண்டவராய பிள்ளையிடம் இவர் பாடங் கேட்டார். கும்பகோணத்தில் ஒரு கிழப் பார்ப்பான் ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டுமறைந்துவிட்டான்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். ”

ஜெர்மனியில் தான் சந்தித்த

பைதான் சாஸ்திரியார் பற்றி ஏ.கே. செட்டியார்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ulakam-sutrum-tamilan-a-k-settiyar.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மாயாஜாலம் (MAGIC)

தமிழில் : நாகலட்சுமி சண்முகம்

எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றைச் சொல்

நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச்சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/mayajalam-magic.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சர்மிஷ்டா

எர்ணாகுளத்தில் பிறந்து பீகார் மாநிலத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும் என்.எஸ்.மாதவனின் எழுத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டவை. இவருடைய 'ஹிக்விக்டா' என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற என்.எஸ்.மாதவனின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார் கே.வி.ஷைலஜா.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sarmisahta.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சுதந்திர பூமி

சுதந்திர பூமி

எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி

1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்கின்றன. கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக்கொடிகளோடு சேர்த்து காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suthanthira-boomi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நெல்சன் மண்டேலா

எழுத்தாளர்:  தா.பாண்டியன்

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,

இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு

மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.

 திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்;

படித்துப் பயன்பெறும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nelson-mandela.htm

வெண்முரசு காலண்டர்

வெண்முரசு தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டு உருவான காலண்டர் உங்கள் இல்லம் தேடி வர:http://www.udumalai.com/venmurasu-natkatti.htm 

அமைதி என்பது வெறுமை அல்ல

அஞ்சலி - வீணாபாணி சாவ்லா
‘ஆதிசக்தி’ எனும் பெயர் தாங்கிய கதவுகளைத் தாண்டி உள்ளே நுழையும்போதே எவரையும் தொற்றிக்கொள்ளும். சென்ற வாரத்தில் நம்மை விட்டு நீங்கிச் சென்ற வீணாபாணி சாவ்லா என்ற அந்த மகத்தான கலைஞர் உருவாக்கிய பல கலைப் படைப்புகளில் ஆதிசக்தியும் ஒன்று. அரங்கக் கலைக்கான பரிசோதனைக் கூடமான ஆதிசக்தியில் பல அரிய ஆக்கங்களை அவர் உருவாக்கினார். வினய் குமார், அரவிந்த் ராணே, நிம்மி ரபேல், சுரேஷ் கலியத் எனப் பிரமாதமான கலைஞர்களை இணைத்து அவர்களுடன் நாடக மொழியின் நுட்பங்களை வகைபிரித்து வளர்த்தெடுத்தார்.
வீணாபாணியின் பயணம் அவருடைய தேடலின் வடிவத்திலேயே நிகழ்ந்தது. அவருடைய ஒருமுகப்பட்ட காதலாக நாடகமும் நிகழ்த்துகலை வடிவமுமே இருந்தன. இந்தியா சுதந்திரமடைவதற்குச் சில மாதங்கள் முன்பு மும்பையில் பிறந்த வீணாபாணி டேராடூன் வெல்ஹாம் பள்ளியில் படிக்கும்போது நாடக உலகம் அவருக்கு அறிமுகமானது. ஷேக்ஸ்பியரின் படைப்புகளைப் படித்ததும் ஷேக்ஸ்பியர் நாடகக் கம்பெனியின் ஆக்கங்களை அவர் பார்த்ததும் அங்கேதான். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் தத்துவத்தில் இன்னுமொரு முதுகலைப் பட்டமும் பெற்ற அவர் மும்பையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரிய வித்யா மந்திரில் வரலாறு மற்றும் இலக்கிய ஆசிரியையாகப் பணிசெய்யத் தொடங்கினார். பள்ளி ஆசிரியையாகக் குழந்தைகளுக்கு நாடகங்கள் இயக்கியபோது தன்னுடைய ஆதர்சம் நாடகம்தான் என உணர்ந்தார்.
மும்பையின் கலைச்சூழல்
அந்தக் காலகட்டமும் முக்கியமானது. மும்பையில் அப்போது பல பரிசோதனை / மாற்று நாடக முயற்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. சத்யதேவ் டுபே, அமோல் பலேகர் மற்றும் பாதல் சர்க்காரின் மராத்திய மொழிபெயர்ப்பு வடிவங்கள் அங்கு நிகழ்த்தப்பட்டுவந்தன. தீவிர யதார்த்த பாணியிலான விஜய் டெண்டுல்கரின் முக்கியமான நாடகங்களும் அரங்கேறின. வீணாபானி யதார்த்தவாத அரங்கியலின் ரசிகை அல்ல. அவருக்கு உலக யதார்த்த அரங்கியல் நடிப்பின் தந்தையான ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் உணர்வைப் பிரதிபலிக்கும் நடிப்பு முறைமையோடு முரண்பாடு இருந்தது. இந்தக் காலகட்டத்தில் உலகின் பிற பாகங்களிலும் ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் முறைக்கு மாறான முறைமைகளைக் கண்டெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன.
முதல் நாடகம்
1978-ல் பள்ளியாசிரியை வேலையை விட்டுவிட்டு வீணாபாணி ஓராண்டுக் காலம் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்தார். மும்பை திரும்பியதும் அப்போது தொடங்கப்பட்டிருந்த பிருத்வி அரங்கின் வரவேற்பு மேலாளராகச் சேர்ந்தார். அவர் இயக்கிய முதல் நாடகமான சோஃபாக்ளஸின் ‘ஈடிபஸ்’ நாடகம் பிருத்வியில்தான் அரங்கேறியது. மேலும் செக் நாடகாசிரியர் டாம் ஸ்டோப்பார்டின் நாடகம் ஒன்றையும் கிரேக்கச் செவ்வியல் நாடகமான ‘ட்ரோஜன் பெண்கள்’-ஐயும் அங்கு இயக்கி நிகழ்த்தினார். நான்காவதாக அரவிந்தரின் காவியச் செய்யுளான சாவித்ரியிலிருந்து ‘ஒரு மகத்தான விடியல்’ என்ற பனுவலை உருவாக்கினார். அந்த நாடகம் அவரை மீண்டும் பாண்டிச்சேரிக்கும் அரவிந்தர் ஆசிரமத்திற்கும் கொண்டுவந்து சேர்த்தது.
பாண்டிச்சேரியில் வீணாபாணி ஆதிசக்தி அரங்கப் பரிசோதனை மையத்தை 1994-ல் தொடங்கினார். ஒரு ஆதரவாளர் அளித்த தரிசு நிலத்தில் வீணாபாணியும் அவருடன் நடிகராக அப்போதிலிருந்தே இணைந்திருக்கும் வினய் குமாரும் செய்த முதல் வேலை மரங்களை நடுவதுதான். மிகச் சிறப்பான உள்ளூர் கட்டுமான முறைகளைப் பயன்படுத்திச் சிறிது சிறிதாக ஆதிசக்தி வளாகம் எழுந்து நின்றது.
நாடக அரங்கில் மரபுவழி நிகழ்த்து மொழி ஒருபுறமும், நவீன மேற்கத்திய நாடக மொழி இன்னொருபுறமும் நிலவிவந்தன. நவீன நாடக மொழியோடு செயல்பட்டுவந்த வீணாபாணி மரபுவழி ஆட்டக் கலைகளை அறிந்துகொள்ளத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். வங்களாத்தின் மயுர்பஞ்ச்சாவ், களரிப்பயட்டு, கேரளத்தின் குடியேட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
அரங்கியல் மொழியொன்றை வடிவமைக்கும் முயற்சியில் வீணாபாணி இந்திய நிகழ்த்துக்கலை களையும் மேற்கத்திய பயிற்சிகளையும் பயின்று அதிலிருந்து ஒரு இந்திய நவீன நாடக மொழியின் அரிச்சுவடிகளை உருவாக்கினார். அரங்க வெளிப் பாட்டின், அசைவின் ஆதாரமாக சுவாசத்தை அவர் கண்டார். குடியேட்டக் கலைப்பயிற்சி தன்னை இவ்விடத்திற்குக் கொண்டுசென்றதாக அவர் பகிர்ந்துள்ளார். களரியின் உடல் கட்டமைப்பு மற்றும் நெகிழ்ச்சி, உணர்வுகளை உச்சமாக வெளிப்படுத்தும் குடியேட்டத்தின் முக பாவனைகள், தாள லயம், ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியின் குரல் பயிற்சி உத்திகள் எனப் பல உத்வேகங்கள் வீணாபாணியின் நாடக மொழியில் மின்னுகின்றன.
மற்றவர் சுதந்தரத்தை மதிக்கும் பண்பு
எனினும் அவரது ஆன்மிகத் தேடலும், அன்னையுடன் அவர் பெற்ற அனுபவத்தின் வழி உணர்ந்த தீவிர தன்னுணர்வுமே அவரது நாடகங்களின் ஆழமான சாரம் என்று சொல்லலாம். தங்களுடைய பல ஆண்டுக்காலத் தீவிர ஆராய்ச்சியின் பயனைப் பலருடன் பகிர்ந்துகொண்ட வீணாபாணி, இந்த ஆன்மிகத் தேடலைப் பயிற்சி பெற வருபவர்களின் தோள்களில் சுமத்தியதில்லை.
தீவிரப் பயிற்சியால் மெருகேற்றப்பட்ட ஒப்பனை களற்ற ‘ஆதிசக்தி’ குழு நடிகர்களின் உடல்மொழி காண்பவரை அரங்க வெளியின் படைப்பூக்கம் மிக்க உச்சத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை. தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு நாடக மொழியொன்றை அனைவரும் புரிந்துகொள்ள ஏதுவாய் உருவாக்கி, அதை அனைவருக்கும் அளிக்க நிறுவனம் ஒன்றையும் உருவாக்கிய மகத்தான பங்களிப்பு வீணாபாணியினுடையது. மரணம் என்பது ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்வது போன்றது என்று அவர் கூறியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் இல்லாத இந்த அறையில் இருக்க கடினமாயிருப்பதாக அவருடைய மாணவர் ஒருவர் பதிவாக இட்டுள்ளார்.
இருபதாண்டுகளுக்கு முன்பு தரிசு நிலமாகக் கிடந்த ஆதிசக்தி வளாகம் இன்று பூத்துக் குலுங்கும் ஒரு குளிர்ச் சோலை. அவர் தேடலின் வழியாய் விளைந்த நாடக மொழி உலகெங்கிலும் இருந்து பலர் வந்து பயிலும் ஒரு முக்கியமான கலை வழி. அவரால் பயன்பெற்ற கலைஞர்களும் நடிகர்களும் அவர் நட்டுவைத்த மாமரங்களைப் போல நாடக உலகில் நிலைத்து அதற்கு மெருகேற்றுவார்கள் என்பதுதான் உடலும் உள்ளமும் ஒருசேரக் கூர்மையாய், தீவிரமாய் அன்பாய் இயங்கிய வீணாபாணி என்னும் மகத்தான கலைஞருக்குப் பெருமைதரும் அஞ்சலியாக இருக்க முடியும்.

வண்ணநிலவனின் எஸ்தர்

வண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் - விக்கிரமாதித்யன்

தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள், (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி முற்போக்குக் கதைகள், ஆண்-பெண் சினேகக் கதைகள், வேலையில்லாத் திண்டாட்டக் கதைகள், வரதட்சிணைக் கொடுமைக் கதைகள், பெண்ணிணக் கதைகள், குடும்பக்கதைகள், கோபம் கொண்ட இளைஞர்களின் அபத்தக் கதைகள், நேர்கோட்டில் இல்லாதக் கதைகள் இப்படி இரண்டாயிரம் வருஷத்துக்கும் போதுமான சிறுகதைகள் தமிழில் வந்து குவிந்து விட்டன.

இவ்வளவு சிறுகதைகளுக்கும் மத்தியில் சுயம்புவான, கலாபூர்வமான ஆழமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, சம்பத், நகுலன், அசோகமித்திரன், சார்வாகன், சுந்தர ராமசாமி, ஆர்.ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கோணங்கி, ஜெயமோகன், வண்ணநிலவன் முதலானோர் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கிய உன்னதம், மொழி வளர்ச்சியெல்லாம் இத்தகைய எழுத்துக்கலைஞர்களையே சார்ந்திருக்கிறது. இவர்களே உண்மையில் படைப்பிலக்கிய வாதிகளாகவும் புதிது செய்து சாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள். எஸ்தர் தொகுப்புக்கும் பாம்பும் பிடாரனும் தொகுப்புக்குமிடையே தெரியும் வித்தியாசம் நல்ல படைப்பாளியின் இயல்பான மாற்றம்.

எழுதுவது பெரிதில்லை. அது சிறுகதைக்கு வளம் சேர்ப்பதாக அமைவது முக்கியம். அதைச் சாதித்தவர்களில் முக்கியமான ஒருவர் வண்ணநிலவன். எஸ்தர், அழைக்கிறவர்கள், துக்கம், தருமம், அரெபியா, பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும் முதலான இவர் கதைகள் தமிழ்ச்சிறுகதையில் ஒரு தனி இடம் வகிப்பவை. இதுவரையுள்ள கதைபோல இல்லாதிருப்பதே ஒரு கதையின் விசேஷத் தகுதி, உயர்வு. இந்தக் கதையை இன்னொருவர் எழுதியிருக்க முடியாது என்று, நினைக்க வைக்கிற தனித்தன்மையே ஒரு படைப்பாளிக்குப் பெருமை. வண்ணநிலவன் கதைகள் அத்தகையவை.

வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திலேயே மிக முக்கியமான ஒன்று. கிறித்துவ வாழ்க்கைப் பின்புலத்தில் இலக்கியமாகி நிற்கிற எழுத்து.

'முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று '

-கதையின் முதல்வாக்கியம்

'வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள் ' -கடைசி வாசகம்.

இதற்கு நடுவே கதை. தென்கோடிக் கிராமம் ஒன்றில் மழை பொய்த்துப் போய் வறட்சியுண்டாகும் போது, ஒரு எளிய கிறித்தவக் குடும்பம் எதிர் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினையே கதையின் மையம்.

குறுநாவலாகத் தெரிகிற இதன் கதை வெளிப்படையானது. முடிவு தவிர்த்து. பாத்திரங்களைத் தன் போக்கில் காண்பித்துக் கொண்டு போவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை விஸ்தாரமாக விவரிப்பதும், காட்சிகளை அடுத்தடுத்து சித்தரிப்பதுமாக வளர்கிறது கதை.

அந்தக் குடும்பம் இனிமேலும் ஊரில் இருக்க முடியாது என்கிற நிலைக்குள்ளாகும்போது, பஞ்சம் பிழைக்க வெளியேறிப் போக வேண்டியிருக்கிறது. நடமாட முடியாத, காது கேளாத, கண் சரியாகத் தெரியாத பாட்டியை என்ன செய்வது ? இதுதான் பிரச்சினை.

அகஸ்டின், டேவிட், பெரிய அமலம், சின்ன அமலம், ஈசாக், பாட்டி, எஸ்தர் - இவர்கள்தாம் கதை மாந்தர்.

அகஸ்டின் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்யமுடியாது. அமைதியானவன்போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல. சதா சஞ்சலப்பட்டவன்.

அடுத்து டேவிட்.

பெரிய அமலம் ஒரு பெரிய குடிம்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். மிகவும் அப்பிராணி. அதிகம் பேசாதவள். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில்லாதவள்.

சின்ன அமலம் இதற்கு எதிரிடையான குணமுடைய பெண்.

ஈசாக் விசுவாசமான ஊழியன். அவனுடைய உலகம் காடு. விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு, மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்கின்றவன்.

எஸ்தர் இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வருகிறவள்.

பாட்டி ஒரு காலத்தில் எல்லோரையும் சீராட்டினவள். இப்போது உபயோகம் இல்லாதவள். பிழைக்கப்போகிற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போக முடியாது இருப்பவள்.

முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும் கேப்பையும் கொண்டுதான் சமையல்.

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். மேலத்தெருவில் ஆளே கிடையாது. இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது ? சாத்தாங்கோயில்விளையிலும் திட்டி விளையிலும் மாட்டைவிட்டு அழித்தாயிற்று. கூழ் காய்ச்சவும் வீட்டுச் செலவுக்கும் வரவரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது.

காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும் இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கை சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்சகாலமாய் மறைந்துவிட்டன.

'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன ? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா ? '-எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது.

யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு.

'நீங்க ரெண்டுபேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க ' - பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் பார்த்துச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி.

'நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க. மதுரையில போய்க் கொத்தவேல பார்ப்போம். மழை பெய்யுந்தன்னியும் எங்ஙனயாவது காலத்த ஓட்ட வேண்டியதுதானே! ஈசாக்கும் வரட்டும். '

'பாட்டி இருக்காள ? '

- டேவிட் கேட்கிறான்.

பதிலே சொல்லவில்லை எஸ்தர்.

அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுசீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்....

***

பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்...

யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின...

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..

***

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியானபிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டுவந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும்...

இவ்வளவு தீவிரமாக நம்பிக்கைகொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன ? ஈசாக் துணையாக இருப்பானா ?

***

பாட்டியை என்ன செய்வதென்ற பிரச்சனையை எஸ்தர் சித்திதான் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிர் கொள்கிறாள். தீர்த்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. தீர்த்து வைக்கிறாள். பாட்டியின் இருப்பு இவர்கள் பஞ்சம் பிழைக்கப் போகிறதற்கு முன் கேள்வியாகிறது. அதற்கு ஒரு விடை காண வேண்டியதிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எஸ்தர் சித்தி ஒருத்திதான் இதை எதிர் கொண்டு சமாளிக்கத் திராணி கொண்டவளாக இருக்கிறாள். கடினச் சித்தம் கொண்டு பாட்டியின் இருப்பை முடித்து வைக்கும்படி ஆகிறது அவளுக்கு.

காலில் காயம்பட்டு ஓட முடியாத பந்தயக்குதிரை சுட்டுக் கொல்லப்படுகிறது. அதன் இருத்தல் அர்த்தமற்றதாகப் போகையில் இப்படி முடிவு நேர்கிறது. குணப்படுத்தமுடியாத நோயின் கொடுமைக்கு ஆளாகிற உயிர், போரில் குண்டடிபட்டு பிழைப்பது கஷ்டம் என்கிற அலவுக்குள்ளாகும் சிப்பாய் இவர்களுக்கெல்லாம் Mercy Killing இருக்கிறது. இதே போல பாட்டிக்கும்.

வண்ணநிலவன் அதிகமான அன்பை பிரசாரம் செய்பவர், பொதுவில். இங்கே இப்படியாக இருக்க நேரும் 'அன்பு '. பாட்டியை என்ன செய்வது ? விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு என்ன செய்யலாம். 'கருணைக் கொலை 'தான் செய்யத் தோன்றுகிறது எஸ்தர் சித்திக்கு. வேறே வழியில்லை. அவள் பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவர்கள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுகிறாள். அகஸ்டினையும் டேவிட்டையும் ஈசாக்கையும் பஞ்சம் பிழைக்கக் கூட்டிக்கொண்டு போக முடிவு செய்கிறாள். பாட்டியை என்ன செய்வாள் ?

பாட்டியின் முடிவு சூசகமாகத்தான் காண்பிக்கப் படுகிறது. சிலவற்றை பூடகமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்த உயிரின் 'விடுதலை ' அப்படியானது.

படிக்காத பெண்ணின் ஜெபம், வாய்க்காலுக்கு அப்பால் வளராத ஊர், இளநீல வர்ணச் சுவர்கள், ஒரு வெள்ளை வெயில், உயிர் பெற்றுவிட்ட இருட்டு, ஆட்டுபிழுக்கை மணம் கலந்த காற்று, ரயில்வே ஸ்டெஷனில் தண்ணீர் பிடிப்பது, தண்டவாளத்தின் மீதேறி மந்தையாக கடந்து போகும் ஆடுகள் - காட்சிச் சித்தரிப்புகளெல்லாமே கதையம்சத்தில் கலந்திருப்பவை.

வழக்கமான கதையைக் காட்டிலும் இதில் விவரணங்கள், தகவல்கள் அதிகப்பங்கு வகிக்கின்றன. இவை கதையை தீவிர கதிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கின்றன.

நிறைய பாத்திரங்களும் அநேக விஷயங்களும் உள்ள இக்கதையின் உருவொழுங்கு சிதையாது, உருவ அமைதி கெடாது இருப்பது உண்டுபண்ணிக் கொண்டதாக இருக்க முடியாது. தன்னியல்பில் கூடிவந்ததாகவே இருக்கவேண்டும்.

இந்தக் கதையின் நடை 'கடல்புரத்தில் ' போல பைபிள் நடையில்லை யெனினும் பெரிதும் அதன் சாயலினான அமைதியும் எளிமையும் உள்ளது. அவனூர், அண்டை வீட்டார் கதைகளைவிடவும் பைபிள் சாயல் குரைவு.

இல்லாமையில் நேர்கிற நொம்பலங்கள், வறுமை, தரித்திர நிலையில் இருக்கும்படியான வாழ்வு, இவற்றைச் சரியாகச் சொல்கிற படைப்புகள், தமிழில் மிகமிகச் சொற்பம். இவை கலை இலக்கியமாவது கஷ்டம் என்பதோடு, சரியாக எழுதுபர்கள் இல்லை என்பதும் இன்னொரு உண்மை. எஸ்தர் இலக்கியமாகியிருக்கிறது என்றால், இதன் பின்னணியில் இந்தக் கலைஞனுக்கு இருக்கும் இது போன்ற வாழ்பனுபவமே காரணம். அனுபவ வறுமை யுள்ளவன் ஒருநாளும் கலைஞனாக மாட்டான். நிறையச் செய்யலாம். செய்து ?

இலக்கியம் செய்வது இல்லை. படைப்பது. எஸ்தர் - படைப்பு. படைப்பாளிகளாக விரும்பும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய படைப்பு.


பிரான்ஸிலிருந்து வெளிவரும் மெளனம் - கலை இலக்கிய இதழிலிருந்து. 1994

நன்றி - திண்ணை

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/yesthar.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/albonshamavin-maranamum-iruthichadangum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

புல் வெளியில் ஒரு கல்

புல் வெளியில் ஒரு கல்
கவிஞர் தேவதேவன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/pulveliyil-oru-kal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பின்தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர்: ஜெயமோகன்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தரகய எழுச்சி வீழ்ச்சிகளினாலானதே வரலாறு. அப்படியெனில் இக்கனவுகள் கொண்ட கோடிக்கணக்கான பலிகளுக்கு என்ன அர்த்தம்? இலட்சியவாதம், தியாகம் ஆகியவை வரவாற்றின் பெரும்பரப்பில் எப்படிப் பொருள்படுகின்றன? ஓர் இடதுசாரி அறிவுஜீவியினூடாக இவ்வினாக்களின் அலைகள் குமுறி ஓய்வதன் கதை இந்நாவல்.மானுட அறத்தின் அடிப்படைகளைக் குறித்த ஒரு தேடல்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pin-thodarum-nilalin-kural.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தெலங்கானா அரசியலும் வரலாறும்

சாதி, மதம், பொருளாதார நிலை, அரசியல் சார்பு அனைத்தையும் கடந்து தனி மாநிலத்துக்காக நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான தெலுங்கானா

மக்கள் போராடியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்திடம் இனியும் இணைக்கமாக இருக்கமுடியாது என்னும் சூழலில் இந்த முடிவை அவர்கள்

எடுத்திருந்தார்கள். ஆனால் அந்தக் கோரிக்கையை வென்றடைவது அத்தனைச் சுலபமாக இல்லை. தங்கள் உடல், உயிர், உடைமை உள்ளிட்ட

அனைத்தையும் இழந்து தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் போராடவேண்டியிருந்தது.

அதற்குப் பிறகே அவர்கள் கனவு நிறைவேறியது.

 ஆந்திரப் பிரதேசத்தைத் தாண்டி இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

தெலுங்கானா மக்களின் தேவைகள் அனைத்தும் இனி தீர்ந்துவிடுமா? அவர்களுடைய சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடுமா? அரசியல் தளத்திலும்

சமூகத்தளத்திலும் இது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தனித் தெலங்கானா முதலில் அவசியம்தானா?

இதனால் ஆதாயம் அடையப் போகிறவர்கள் யார்?

 ஜனனி ரமேஷின் இந்தப் புத்தகம் தெலங்கானா கோரிக்கை உதயமான தினம் தொடங்கி இன்று வரையிலான நிகழ்வுகளை அவற்றின்

பின்னணியோடு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. சமகால அரசியமீது ஆர்வம் உள்ள அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/telungana-arasiyalum-varalarum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நவீன இந்தியாவின் சிற்பிகள்

எழுதியவர்: ராமச்சந்திர குஹா.

தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.

· மகாத்மா காந்தி

· ஜவாஹர்லால் நேரு

· பி.ஆர். அம்பேத்கர்

· ராம்மோகன் ராய்

· ரவீந்திரநாத் தாகூர்

· பாலகங்காதர திலகர்

· ஈ.வெ. ராமசாமி

· முகம்மது அலி ஜின்னா

· சி.ராஜகோபாலச்சாரி

· ஜெயப்பிரகாஷ் நாராயண்

· கோபால கிருஷ்ண கோகலே

· சையது அகமது கான்

· ஜோதிராவ் ஃபுலே

· தாராபாய் ஷிண்டே

· கமலாதேவி சட்டோபாத்யாய்

· எம்.எஸ்.கோல்வல்கர்

· ராம் மனோகர் லோஹியா

· வெரியர் எல்வின்

· ஹமீத் தல்வாய்

நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.

பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/naveena-indiyavin-sirpikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42