Monday 1 December 2014

மரி என்கிற ஆட்டுக்குட்டி-பிரபஞ்சன்

இந்தக் கதையில், பிரபஞ்சனின் சரளமான நடை, வட்டார பேச்சு வழக்கு, அனாவசியமான வார்த்தைகளும் வாக்கியங்களும் இல்லாத சொற்சிக்கனம் ஆகியன நம்மை ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. கச்சிதமான கதை அமைப்பும் வடிவமும் பிரபஞ்சன் சிறுகதைகளி்ன் சிறப்பம்சம். அதற்கு சிகர உதாரணமாக இருப்பது மரி என்கிற ஆட்டுக்குட்டி கதைதான் என்று சொல்லலாம்.

தலைமை ஆசிரியரின் அணுகுமுறையும், டிசி கொடுப்பதாக அவர் எடுத்த முடிவும், அதற்காக அவர் வைக்கும் காரணங்களும் சாதாரணமாக யாரும் செய்யக்கூடியதுதான். ஆனால் அப்படி முடிவு செய்வதும் தண்டிப்பதும் சரியாக இருக்குமா? ஒரு மாணவன் அல்லது மாணவி மீது எடுக்கும் தண்டணைக்கு இத்தகைய மேம்போக்கான புரிதல்கள் போதுமானவைதாமா? ஆகிய கேள்விகளை இக்கதையின் மூலம் நாம் எதிர்கொள்கிறோம்.

யாரையும் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் முன் அரவணைக்க வேண்டும். அப்படி இல்லாமல் எடுத்தவுடன் தண்டிப்பது பலன் தராது என்பதைவிட, அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்ற உளவியல் தன்மையின் பின்னனி நுட்பத்தை மிக அற்புதமாக இந்தக் கதையில் எடுத்துக் காட்டியிருக்கிறார் பிரபஞ்சன். இந்த தன்மை, இந்த புரிதல் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை. எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அப்படி இருக்கும்போதே நல்ல மாணவர்கள் உருவாக முடியும் என்பதை அழுத்தமாக இந்தக் கதை பதிவு செய்கிறது.

ஒரு ஆசிரியன் மாதா, பிதா, குரு என்ற மூன்று நிலையிலும் நின்று செயல்படும்போதுதான் அவன் மாணவர்களுக்குச் சிறந்த ஆசிரியனாக ஆகமுடியும். ஆனால் பிரபஞ்சன் ஆசிரியனை இங்கே தெய்வத்தின் நிலைக்கும் கொண்டுவைக்கிறார். மரியை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிட்டு அதற்கு நல்ல மேய்ப்பன் தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/mari-engira-aattukutti.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment