Wednesday 25 February 2015

தீதும் நன்றும்!

தீதும் நன்றும்!

தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்றும்!’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல்_சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல். பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் இன்பமூட்டும் கவிதை! ஊர்வலம் பற்றி இவர் எழுதிய கட்டுரையில், கோபமும் சாடலும் தீப்பற்றி எரிவதை உணரலாம்! அவ்வப்போது நடத்தப்படும் பேரணிகளால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், மருத்துவ மனைக்குச் செல்லும் நோயாளிகளும் இழந்த நேரத்தையும், இழந்த நாட்களையும் வகுத்துக் காட்டியிருக்கும் விதம் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சாட்டையடி! இப்படி, படித்து முடித்தபின் சிந்திக்க வைக்கக் கூடிய அழுத்தமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/theethum-nandrum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment