Wednesday 25 February 2015

கோபி கிருஷ்ணன் படைப்புகள்

கோபி கிருஷ்ணன் படைப்புகள்

 கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப்பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை – இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எணபத்தொன்பதின் நிதரிசனங்கள்.
ஒரு சாதாரண, விசேஷ சமூக முக்கியத்துவம் பெறாத, சிந்திக்க்க் கூடிய மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக் கூடியது அலுப்புதான். உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மன்ப்பான்மை இத்துடன் கூடவே ஒரு அலுப்பும் விலகாத புகை மூட்டமாக இருக்கும்.
ஒரு சாதாரண மனிதன் இந்த அலுப்பைத் தனக்குப் பொருத்தமான அல்லது பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தவிர்க்க முயலுகிறான்.
இந்த அலுப்பை மனதார ஒப்புக்கொண்டு எழுத்தில் பதிவுசெய்வதுதான் கோபிகிருஷ்ணனின் படைப்புகள். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திட மனிதன் என்பதையே காட்டுகிறது.
அசோகமித்திரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/gobikeishnan-padaippukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment