Tuesday 17 February 2015

மறக்க முடியாத மனிதர்கள்

மறக்க முடியாத மனிதர்கள்

எழுத்தாளர்: வண்ணநிலவன்

வல்லிக்கண்ணன் உரையாடல்களில் ஏராளமான தகவல்களும், ஞாபகசக்தியை வியக்க வைக்கும்

பல பழைய சம்பவங்களும் நினைவுகளும் இடம் பெறும். இன்றும் இத்தனை வயதிலும் அவரது

நினைவாற்றல் அப்படியேதானிருக்கிறது.

நான் அவரைச் சந்திக்கிறவரை எனக்குச் சங்க இலக்கியத்திலெல்லாம் அவ்வளவாக ஈடுபாடே

கிடையாது. பள்ளிக்கூடத்தில் படித்த கவிதைகளோடு எல்லாம் சரி. ஆனால், சங்க இலக்கியத்தின்

நுட்பத்தையும், மேன்மையையும் சொல்லிப் படிக்க வைத்தவர் நம்பிராஜன்தான்.

மோர்ச் சாதம் சாப்பிடும்போது, ரசத்தையும் கொஞ்சம் விட்டுக்கொள்ளச் சொன்னார்

ராஜநாராயணன். எனக்கு அது புதுசாக இருந்தது. ‘மோர்ச் சாதத்திலே ரசம் விட்டுச் சாப்பிட்டா

ருஜியா இருக்கும்’ என்றார். சாப்பிட்டுப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. இன்றும் இந்தப் பழக்கம்

தொடர்கிறது.

ஆறேழு மாதங்கள்தான் பாண்டிச்சேரி வாசம். ஆனால் அருமையான பல நண்பர்கள் பாண்டிச்சேரியில்

கிடைத்தார்கள். அத்தனை நட்புக்கும் காரணம் பிரபஞ்சன்தான்.

எந்த விஷயத்தையும் உணர்ச்சியினால் எடை போடாமல், அறிவினால் எடை போடுகிறவர் சோ.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் சஞ்சரிக்கும் அறிவு அவருடையது.

எழுத்துலகில் மறக்க முடியாத சில படைப்புகள் மட்டுமின்றி சில மறக்க முடியாத நட்புகளும்

கிடைத்தன. இவற்றையெல்லாம் சொல்லும் முயற்சியே இந்நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/arakka-mudiyatha-manidhargal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment