Friday, 12 December 2014

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/albonshamavin-maranamum-iruthichadangum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

புல் வெளியில் ஒரு கல்

புல் வெளியில் ஒரு கல்
கவிஞர் தேவதேவன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/pulveliyil-oru-kal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பின்தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர்: ஜெயமோகன்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தரகய எழுச்சி வீழ்ச்சிகளினாலானதே வரலாறு. அப்படியெனில் இக்கனவுகள் கொண்ட கோடிக்கணக்கான பலிகளுக்கு என்ன அர்த்தம்? இலட்சியவாதம், தியாகம் ஆகியவை வரவாற்றின் பெரும்பரப்பில் எப்படிப் பொருள்படுகின்றன? ஓர் இடதுசாரி அறிவுஜீவியினூடாக இவ்வினாக்களின் அலைகள் குமுறி ஓய்வதன் கதை இந்நாவல்.மானுட அறத்தின் அடிப்படைகளைக் குறித்த ஒரு தேடல்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pin-thodarum-nilalin-kural.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தெலங்கானா அரசியலும் வரலாறும்

சாதி, மதம், பொருளாதார நிலை, அரசியல் சார்பு அனைத்தையும் கடந்து தனி மாநிலத்துக்காக நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான தெலுங்கானா

மக்கள் போராடியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்திடம் இனியும் இணைக்கமாக இருக்கமுடியாது என்னும் சூழலில் இந்த முடிவை அவர்கள்

எடுத்திருந்தார்கள். ஆனால் அந்தக் கோரிக்கையை வென்றடைவது அத்தனைச் சுலபமாக இல்லை. தங்கள் உடல், உயிர், உடைமை உள்ளிட்ட

அனைத்தையும் இழந்து தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் போராடவேண்டியிருந்தது.

அதற்குப் பிறகே அவர்கள் கனவு நிறைவேறியது.

 ஆந்திரப் பிரதேசத்தைத் தாண்டி இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

தெலுங்கானா மக்களின் தேவைகள் அனைத்தும் இனி தீர்ந்துவிடுமா? அவர்களுடைய சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடுமா? அரசியல் தளத்திலும்

சமூகத்தளத்திலும் இது எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தனித் தெலங்கானா முதலில் அவசியம்தானா?

இதனால் ஆதாயம் அடையப் போகிறவர்கள் யார்?

 ஜனனி ரமேஷின் இந்தப் புத்தகம் தெலங்கானா கோரிக்கை உதயமான தினம் தொடங்கி இன்று வரையிலான நிகழ்வுகளை அவற்றின்

பின்னணியோடு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. சமகால அரசியமீது ஆர்வம் உள்ள அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத நூல்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/telungana-arasiyalum-varalarum.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நவீன இந்தியாவின் சிற்பிகள்

எழுதியவர்: ராமச்சந்திர குஹா.

தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.

· மகாத்மா காந்தி

· ஜவாஹர்லால் நேரு

· பி.ஆர். அம்பேத்கர்

· ராம்மோகன் ராய்

· ரவீந்திரநாத் தாகூர்

· பாலகங்காதர திலகர்

· ஈ.வெ. ராமசாமி

· முகம்மது அலி ஜின்னா

· சி.ராஜகோபாலச்சாரி

· ஜெயப்பிரகாஷ் நாராயண்

· கோபால கிருஷ்ண கோகலே

· சையது அகமது கான்

· ஜோதிராவ் ஃபுலே

· தாராபாய் ஷிண்டே

· கமலாதேவி சட்டோபாத்யாய்

· எம்.எஸ்.கோல்வல்கர்

· ராம் மனோகர் லோஹியா

· வெரியர் எல்வின்

· ஹமீத் தல்வாய்

நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.

பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/naveena-indiyavin-sirpikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்த அசாதாரணமான நிகழ்வு எப்படிச் சாத்தியமானது?
பிரமிக்க வைக்கும் அரசியல் பின்புலம், அளவற்ற அதிகாரம், ஆள் பலம், பண பலம் அனைத்தும் இருந்தும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையாகச் சிக்கிக்கொண்டது எப்படி?

நீதிமன்ற சாட்சியங்கள், விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் எதிர்த்தரப்பினரின் வாதங்கள், பல்வேறு நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் கண்முன் நிறுத்துகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர்மீதும் வழக்குப் பதிவான தினம் தொடங்கி அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்த தினம் வரையிலான முக்கிய நிகழ்வுகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டபோதும் அனைத்தையும் உடைத்தெறிந்த ஜெயலலிதாவால் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் ஏன் மீளமுடியவில்லை என்பதற்கான காரணங்களும் விரிவாகவே இதில் இடம்பெற்றுள்ளன.

ஓர் ஊடகவியலாளராக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்பம் முதல் கவனித்துவரும் கோமல் அன்பரசன், தமிழ் வெகுஜன ஊடகங்களில் வெளிவராத பல தகவல்களையும் விரிவான பின்னணி விவரங்களையும் விறுவிறுப்பான நடையில் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க ‘
http://www.udumalai.com/jeyalalitha-sothukuvippu-valakku.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Wednesday, 10 December 2014

‘வாசிப்பு வாழ்க்கை 2014’

‘வாசிப்பு வாழ்க்கை 2014’ அல்லது ‘2014ல் வாசித்த சிறந்த புத்தகங்கள்’ உங்கள் அனுபவத்தை 300 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. கடைசி நாள்: 15-12-2014

அனுப்ப வேண்டிய முகவரி: udumalaibooks@gmail.com